சவுக்கு சங்கருக்கு ஆப்பு…! ஐகோர்ட் போட்ட ஆர்டர்
வாய்க்கு வந்ததை பேசுவது… எல்லாம் தெரிந்த மாதிரி ஜம்பம் காட்டுவது, வழக்கு என்றால் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்து பம்முவது. இவை அனைத்தையும் ஒரே சேர தமது உடல் மற்றும் கருத்து மொழியில் யூ டியூப் மூலம் பேசுபவர் சவுக்கு சங்கர்.
எந்த பத்திரிகையில் பேனா பிடித்துக் கொண்டு இவர் செய்தியாளராக அல்லது உதவி ஆசிரியராக, செய்தி ஆசிரியராக பணியாற்றினார் என்றால் அதற்கு விடையும் இருக்காது, பதிலும் தெரியாது.
ஒரு காலத்தில் எடப்பாடி, அதிமுக என நார்நாராக விமர்சித்து கிழித்து போட்டவர் இப்போது பாஜகவின் அபிமானியாக மாறி, திமுக பற்றி தமக்கு தெரிந்த எல்லாம் உண்மைகள் என்று பேசி வருகிறார். உள்ளரங்கத்தில் இவர் பேசி வெளியிடும் கருத்துகள் அனைத்தையும் உள்ளே புகுந்து பார்த்தால் அதில் ஆயிரம் ஓட்டைகள் இருக்கும் என்கின்றனர் ஒரிஜனல் பத்திரிகையாளர்கள்.
இந் நிலையில் போதை பொருள் கடத்தும் கும்பலுடன் பிரபல சினிமா தயாரிப்பு நிறுவனமான லைக்காவை மையப்படுத்தி அண்மையில் சவுக்கு சங்கர் ஒரு காணொளியில் பேசி இருந்தார். அவரின் இந்த கருத்து பெரும் விவாதமானது, லைக்கா தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையடுத்து, லைக்கா நிறுவனத்தினர் அவதூறு மற்றும் களங்கம் விளைவிப்பதாக சவுக்கு சங்கரின் பேச்சு இருப்பதாக சென்னை உயர்நீதி மன்றத்தின் கதவை தட்டியது.
மனுவை தாக்கல் செய்த லைக்கா, ஒரு கோடியே 1000 ரூபாய் மான நஷ்ட ஈடாக சவுக்கு சங்கர் தரவேண்டும், வீடியோவில் கிடைத்த வருமானத்தை கோர்ட்டில் டெபாசிட் செய்ய வேண்டும், சர்ச்சையான அந்த வீடியோவை நீக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கோரியிருந்தது.
நீதிபதி சதிஷ்குமார் முன்பு இந்த மனு விசாரணைக்கு வந்தது. அதை விசாரித்த அவர், லைக்கா பற்றி அவதூறு கருத்துகள் தெரிவிக்க சவுக்கு சங்கருக்கு இடைக்கால தடை விதித்தார். இந்த வீடியோவால் கிடைத்த வருமானத்தை கோர்ட்டில் செலுத்த யுடியூப் நிறுவனத்துக்கு உத்தரவிட்டார்.
மேலும், யுடியூப்பில் உள்ள மற்ற வீடியோக்களை நீக்குவது பற்றி சவுக்கு சங்கர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை வரும் 12ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.