அனைவருக்கும் அம்மா வாஷிங்மெஷின்…! இல்லத்தரசிகளை குளிர்விக்கும் அதிமுக தேர்தல் அறிக்கை
சென்னை: அனைவருக்கும் அம்மா வாஷிங்மெஷின் வழங்கப்படும் என்று அதிமுக தமது தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்துள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலுக்கு கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளும் தயாராகி விட்டன. அதிமுக, திமுக ஆகிய கட்சிகள் ஆளுக்கொரு கூட்டணியை அமைத்து தேர்தலை எதிர்கொள்கின்றன. இதில் திமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டுவிட்டது. தமக்கான தொகுதிகளையும் வெளியிட்டு அடுத்த கட்ட தேர்தல் நடவடிக்கைகளில் இறங்கிவிட்டன. 500 தேர்தல் வாக்குறுதிகள் என்ற திமுகவின் தேர்தல் அறிக்கைக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
இந் நிலையில் அதிமுகவும் தமது தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டு உள்ளது. சென்னையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் துணை முதலமைச்சரும் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான ஓபிஎஸ்சும், இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமமைச்சருமான எடப்பாடி பழனிசாமியும் தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர்.
அதன் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள அம்சங்களின் விவரம் வருமாறு:
அம்மா இல்லம் என்ற திட்டத்தின் மூலம் அனைவருக்கும் வீடு
மகளிர் நலன்காக்கும் குலவிளக்கு திட்டம், பேருந்து பயண சலுகை
ரேஷன் பொருட்கள் வீடுதேடி வரும்திட்டம்
6 சிலிண்டர்கள் வழங்கும் திட்டம்
ஆண்டு முழுவதும் கல்லூரி மாணவர்களுக்கு 2 ஜிபி டேட்டா
கல்வி கடன் தள்ளுபடி, வீட்டில் ஒருவருக்கு அரசு பணி