#Rahulgandhi ரெண்டே வரிதான்…! பொளந்து கட்டிய ராகுல்
டெல்லி: நாட்டின் குரலுக்காக தான் எதற்கும் தயார் என்று அறிவித்துள்ளார் ராகுல் காந்தி.
என்றோ அரசியல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் மோடி என்ற 2 நபர்களை பற்றி பேச போய் இப்போது எம்பி பதவியை இழந்திருக்கிறார் ராகுல் காந்தி. நேற்றைய தினம் இந்த அவதூறு வழக்கில் அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு இருக்கிறது.
இதை தொடர்ந்து எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்து இன்று மக்களவை செயலகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இந்த நடவடிக்கைக்கு நாடு முழுவதிலும் இருந்து கடும் கண்டன குரல்களும், விமர்சனங்களும் எழுந்து இருக்கின்றன.
பாஜகவையும், மத்திய அரசையும் கண்டித்து சமூக வலைதளங்களில் சரமாரியான எதிர்ப்பு குரல்கள் பதிவாகி உள்ளன. இந் நிலையில் தம் மீதான நடவடிக்கை குறித்து ராகுல் காந்தி டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
அதில் அவர் கூறி உள்ளதாவது: இந்தியாவின் குரலுக்காக போராடுகிறேன். அதற்காக நான் என்ன விலை கொடுக்கவும் தயாராகவே இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.