கேர்ள் பிரண்டுடன் நடிகர் விஜய் மகன் சஞ்சய் பண்ணிய வேலை…! செம வீடியோ…
ஒட்டாவா: காரில் கேர்ள் பிரண்டுடன் நடிகர் விஜய் மகன் சஞ்சய் போட்ட ஆட்டம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி இருக்கிறது.
தமிழ் திரையுலகின் பிளாக் பஸ்டர் ஹீரோ விஜய். இவரது மகன் சஞ்சய். தமது தந்தையுடன் சில திரைப்படங்களில் நடனமாடி கலக்கி இருக்கிறார். தமது மகனுக்கு சினிமா ஆர்வம் இருப்பதால் அவரை கனடாவில் பிலிம் மேக்கிங் குறித்த படிப்பில் சேர்த்துள்ளார்.
சஞ்சய் கனடாவில் தற்போது உள்ளார். இந் நிலையில் அவர் தமது கேர்ள் பிரண்டுடன் இணைந்து காரில் பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார். இது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி சக்கை போடு போடுகிறது.
அந்த வீடியோ இரவு நேரத்தில் படமாக்கப்பட்டு உள்ளது, நன்றாகவே தெரிகிறது. காரில் இன்ன பிற நண்பர்களுடன் சஞ்சய்யுடன் இருப்பதும் வீடியோவில் பதிவாகி இருக்கிறது. இந்த வீடியோவை பார்க்கும் விஜய் ரசிகர்கள் அதை வைரலாக்கி உள்ளனர்.