மருத்துவமனையில் இருந்த திமுக எம்பி ஆ. ராசா மனைவி பரமேஸ்வரி திடீர் மரணம்…!
சென்னை: திமுக எம்பி ஆ ராசாவின் மனைவி பரமேஸ்வரியின் உடல்நிலை கவலைக்கிடமாக இருந்த நிலையில் அவர் தற்போது காலமானார். அவருக்கு வயது 53.
திமுக துணை பொது செயலாளரும், அக்கட்சியின் எம்பியுமாக இருப்பவர் ஆ ராசா. கட்சியின் முக்கிய பிரமுகர்களில் ஒருவராக இவர் கடந்த சில நாட்களில் முக்கிய நிகழ்வுகளில் தலைகாட்டாமல் இருந்து வந்தார். அதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் இப்போது அது உண்மை இல்லை என்று தெரிய வந்திருக்கிறது.
அவரது மனைவி பரமேஸ்வரியின் உடல்நிலை கடந்த 6 மாதங்களாக மார்பக புற்றுநோயால் அவதிப்பட்டார். அதற்கான சிகிச்சையும் அவர் எடுத்து வந்தார்.
சென்னை குரோம்பேட்டையில் உள்ள பிரபல ரேலா மருத்துவமனையில் அவர் இப்போது சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது.
கீமோதெரபி சிகிச்சையை அவரது உடல் ஏற்றுக் கொள்ளவில்லை என்றும், வென்டிலேட்டர் உதவியுடன் பரமேஸ்வரி சிகிச்சையில் உள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந் நிலையில் இன்றிரவு 7.05 மணிக்கு அவர் உயிரிழந்துவிட்டார் என்று ரேலா மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.