முதல்வர் ஸ்டாலினை 'காப்பியடித்த' பிரபல நடிகர்…!
தஞ்சை: முதலமைச்சர் ஸ்டாலின் போன்று பிரபல நடிகரான போஸ் வெங்கட், கொரோனா நோயாளிகளை சந்தித்து தைரியமூட்டி உள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பரவலை குறைக்கும் நடவடிக்கைகள் வேகம் எடுத்துள்ளன. ஊரடங்கு உத்தரவானது மேலும் ஒரு வாரத்துக்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. இந் நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் போன்று பிரபல நடிகர் ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ள நோயாளிகளை நேரில் சந்தித்து தைரியம் சொல்லி இருக்கும் விவரம் வெளியாகி உள்ளது.
அந்த நடிகர் வேறு யாருமல்ல… அவரது பெயர் போஸ் வெங்கட். தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் கோட்டை பெருமாள் கோயில் பகுதியில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்துக்கு அவர் சென்றிருக்கிறார். அங்கு சிகிச்சையில் உள்ள நோயாளிகளை போஸ் வெங்கட் சந்தித்து ஆறுதலாக பேசி இருக்கிறார்.
தைரியம் ஒன்றே போதும், கொரோனாவில் இருந்து நாம் வென்று வர முடியும் என்று அவர்களுக்கு உற்சாகமூட்டி உள்ளார். நடிகர் போஸ் வெங்கட் ஆறுதல் வார்த்தைகள் தங்களுக்கு உத்வேகத்தை தருவதாகவும், விரைவில் நலம் பெற்று வீடு திரும்புவோம் என்றும் நோயாளிகள் நம்பிக்கையுடன் கூறி இருக்கின்றனர்.