தொடரும் சசிகலாவின் ஆன்மீக வாசம்….! திருவேற்காடு கோயிலில் சிறப்பு வழிபாடு
திருவள்ளூர்: திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயிலுக்கு சென்ற சசிகலா வழிபாடு நடத்தினார்
சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை முடிந்து சில மாதங்களுக்கு முன்னர் பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து சசிகலா விடுதலையானார். சென்னையில் தி.நகரில் உள்ள தனது உறவினர் வீட்டில் அவர் இப்போது வசித்து வருகிறார்.
அரசியலில் இருந்து ஒதுங்குவதாக அறிவித்த சசிகலா, தமிழகம் முழுவதும் ஆன்மீக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். திருச்சி, திருவாரூர், கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று அங்குள்ள பிரசித்தி பெற்ற கோயில்களில் வழிபாடு நடத்தி வருகிறார்.
அதன் ஒரு பகுதியாக நேற்று திருவள்ளூர் மாவட்டம், திருவேற்காட்டில் பிரசித்தி பெற்ற தேவி கருமாரியம்மன் கோயிலுக்கு சசிகலா சென்றார். அங்கு சிறப்பு வழிபாட்டையும் அவர் நடத்தினார். பின்பு, கோயிலில் நடைபெற்ற 108 சங்காபிஷேக பூஜையிலும் கலந்து கொண்டார்.