ஸ்டாலின் எந்த தொகுதியில் போட்டி…? விருப்ப மனுவில் இருந்த சஸ்பென்ஸ்..!
சென்னை: மீண்டும் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட ஸ்டாலின் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார்.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் வேலைகளில் படு பிசியாகிவிட்டன. கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை, தொகுதி ஒதுக்கீடு என தீவிரமாக களம் இறங்கி உள்ளன.
இந் நிலையில் சென்னை கொளத்தூர் தொகுதியில் மீண்டும் போட்டியிட திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை அண்ணா அறிவாலயத்தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதியிடம் அவர் அளித்துள்ளார்.
தற்போது 9வது முறையாக அவர் தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடுகிறார். 2011 மற்றும் 2016ம் ஆண்டு இதே கொளத்தூர் தொகுதியில் தான் ஸ்டாலின் போட்டியிட்டு வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.