இதை பாலோ பண்ணுங்க…! இ - பதிவு உடனே பெறலாம்…!
சென்னை: இன்று முதல் தமிழகத்தில் இ பதிவு முறை நடைமுறைப்படுத்தப் பட்டு உள்ள நிலையில் பெரும்பாலானவர்கள் அதை பற்றி அறியாமல் இருக்கின்றனர்.
தமிழகத்தில் மாவட்டங்களுக்கு உள்ளே, வெளியே பயணிக்க இ பதிவு முறை அறிவிக்கப்பட்டுள்ள அதை எப்படி பெறுவது என்ற குழப்பம் பலருக்கும் எழுந்துள்ளது. பெரும்பாலோனார் இ பதிவு முறையை இ பாஸ் என்று நினைத்துக் கொண்டு உள்ள அதற்கான வழிமுறைகளை கையாண்டு வருகின்றனர்.
இ பாஸ் என்பது வேறு… இ பதிவு முறை என்பது வேறாகும். இந்த இ பதிவு முறையை எப்படி பதிய வேண்டும் என்பது பலருக்கு தெரியாமல் இருக்கிறது. அதற்கான வழிகாட்டுதல்களை தமிழக அரசு வெளியிட்டு உள்ளது. அதன்படி, இ பதிவு செய்ய முதலில் தமிழக அரசின் http://eregister.tnega.org என்ற இணைய தளத்தில் உள்நுழைய வேண்டும். பின்னர் தங்களது செல்போன் எண்ணை பதிவு செய்ய வேண்டும். உடனடியாக உங்கள் போனுக்கு ஒரு ஓடிபி எண் வரும்.
அந்த ஓடிபி எண்ணை பதிவு செய்த பின்னர், இ பதிவு என்ற காலம் திறக்கும். அந்த கட்டத்தில் யார் பயணம் செய்ய உள்ளனர், எந்த தேதியில் பயணம், வாகனத்தின் எண் என கேட்கப்பட்ட அனைத்து விவரங்களையும் பதிவு செய்ய வேண்டும்.
எந்த காரணத்துக்காக பயணம் செய்கிறோமோ அதற்கான ஆவணத்தையும் இணைக்க வேண்டும். உதாரணமாக திருமணம் என்றால் அதற்கான அழைப்பிதழ், அதன் தொடர்ச்சியாக ஆதார், பான், ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட், குடும்ப அட்டை என்ற இந்த 5 ஆவணங்களில் ஏதோ ஒன்றை அளிக்க வேண்டும்.
ரயில் பயணம் என்றால் ரயில் டிக்கெட் ஜெராக்ஸ், ரயில் எண், கோச் நமபர், ரயில் வந்து சேரும் நேரம், இடம் இவற்றுடன் மேற்சொன்ன 5 ஆவணங்களில் ஏதோ ஒன்றை அளிக்க வேண்டும். இந்த பாஸ் ரயில் நிலையம் வரை தான் செல்லும். அதன் பின்னர் தாம் எங்கு செல்கிறோமா அதன் விவரங்களை குறிப்பிட்டு பதிவை புதுப்பிக்க வேண்டும்.