Sunday, May 04 12:43 pm

Breaking News

Trending News :

no image

ஓபிஎஸ் அவமானப்படுத்தப்பட்டாரா…? மோடி மீட்டிங்கில் ஷாக்


நீண்டகால அரசியல் அனுபவம்மிக்கவும், முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் பாஜகவின் சேலம் மாநாட்டில் அவமானப்படுத்தப்பட்டதாக சர்ச்சை வெடித்துள்ளது.

அதிமுக, இரட்டை இலை ஆகியவற்றை பயன்படுத்தக்கூடாது என்று ஓ பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது. ஓபிஎஸ் தரப்புக்கு இது பெரும் பின்னடைவு என்ற போதிலும் சட்ட போராட்டத்தை அவர் கைவிடவில்லை.

இந் நிலையில் பிரதமர் மோடி லோக்சபா தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். கூட்டத்தில் கூட்டணி கட்சியினரை ஒவ்வொருவராக பேச அழைக்கப்பட்டனர். அதன்படியே ஒவ்வொருவராக பேசினர், சென்றனர்.

ஓ பன்னீர்செல்வம் அழைக்கப்பட்டதில் தான் வித்தியாசமே இருந்தது. அனைத்திந்திய அண்ணா திமுக சார்பில் ஓபிஎஸ் பேசுவார் என்று கேபி ராமலிங்கம் அறிவிக்க, கூட்டத்தில் சில நொடிகள் அமைதி.

அதை தொடர்ந்து, ஓ பன்னீர்செல்வம் மேடையேறி மைக்கில் பேசிக் கொண்டு இருந்தார். அப்போது தான் அந்த சம்பவம் நிகழ்ந்தது. திடீரென கேபி ராமலிங்கம் பேச்சை நிறுத்துமாறு கூற, ஒரு கணம் தடுமாறித்தான் போனார் ஓபிஎஸ்.

எதற்காக பேச்சை நிறுத்த வேண்டும் என்று குழம்பி நிற்க… மேடைக்கு பிரதமர் மோடி வந்திருப்பதே காரணம் என்று தெரிந்து கொண்டார். மேடையில் கூட்டணிக்கட்சியினருக்கு வணக்கம் வைத்தபடியே பிரதமர் மோடி சென்றார்.

ஓபிஎஸ் பேசும் போது திடீரென ஏன் குறுக்கே வந்து பேச்சை நிப்பாட்ட சொல்லணும்? அவர் ஒரு முன்னாள் முதலமைச்சர், ஒரு கட்சியின் மூத்த முக்கிய பொறுப்பில் இருந்தவர்… இப்படியா அவரை அவமானப்படுத்துவது என ஆதரவாளர்கள் பொருமியுள்ளனர்.

அரசியல் மேடைகளில் இதுபோன்ற சம்பவங்கள் சகஜம் என்ற போதிலும், அதை சொல்வதில் ஒரு பாந்தம் இருக்க வேண்டாமா? என்ற கேள்விகளும் எழுந்துள்ளன. இன்னும் சிலரோ, இந்த அவமானம் தேவையா? என்றும் ஓபிஎஸ்சை கிண்டலடிக்க ஆரம்பித்துவிட்டனர்.

Most Popular