கருப்பாய்.. சென்னை மழையில் கெத்தாக ஓடிய ‘அது’…!
டெல்லி: சென்னை புயல் மழையின் போது ஏற்பட்ட வெள்ள நீரில் மஹிந்திரா வாகனம் அசால்ட்டாக ஓடிய வீடியோ காட்சி வெளியாகி இருக்கிறது.
சென்னையில் 2015ம் ஆண்டு பெருமழை பாதிப்பை பல மடங்கு என்று சொல்ல வைத்திருக்கிறது மிக்ஜாம் புயல். விடாமல் பெய்த தள்ளிய மழையால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்கள் வெள்ள நீரில் இன்னமும் மிதந்து வருகின்றன.
மீட்பு நடவடிக்கைகள், நிவாரண பணிகள் என்று வேகமாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும், அடுத்தடுத்து காப்பாற்றுமாறு அபய குரல்கள் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து எழுந்த வண்ணம் உள்ளன.
நல் உள்ளம் கொண்டோர், அரசுடன் இணைந்து உதவி புரிந்து வரும் நிலையில், அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடும் ஏற்பட்டு வருகிறது. மழையின் பாதிப்பு, மீட்பு என அது பற்றிய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங்கில் இருந்து வருகின்றன.
அந்த வகையில் சென்னையில் மழை வெள்ளத்தின் போது எடுக்கப்பட்ட ஒரு வீடியோ இந்தியா முழுமையும் பரவி உள்ளது. இன்ஸ்டாகிராம் பதிவில் வெளியிடப்பட்ட அந்த வீடியோவை மஹிந்திரா நிறுவனத்தின் ஆனந்த் மஹிந்திரா தனது வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். சென்னையில் உள்ள ஒருவர் தமக்கு forward message ஆக அனுப்பி உள்ளார் என்றும் கூறி இருக்கிறார்.
அந்த வீடியோ விவரம் இதுதான்:
சென்னையில் ஏதோ ஒரு பகுதியில் அந்த வீடியோ எடுக்கப்பட்டு இருக்கிறது. எங்கு பார்த்தாலும் இடுப்பளவு தண்ணீர், வீடுகள், கட்டிடங்கள், வணிக வளாகங்கள் வெள்ளத்தில் மிதந்து கிடக்க… எங்கிருந்தோ ஒரு மஹிந்திரா வாகனம் அசால்ட்டாக வருகிறது.
இடுப்பளவு தண்ணீரை கிழித்துக் கொண்ட அந்த வாகனம் சர்ரென்று பறக்கிறது. மழை தண்ணீரில் வாகனத்தை ஓட்டுவது என்பது லேசானது அல்ல… நீர் உள்ளே புகுந்தால் வாகனம் அத்தோடு காலி.. இது அனைவருக்கும் தெரியும்.
ஆனால் அந்த வாகன ஓட்டுநர் மஹிந்திரா thar வாகனத்தை ஓட்டியது அற்புதம், வாகனத்தின் தயாரிப்பு தான் அதற்கு காரணம் என்ற வகையில் ஆனந்த் மஹிந்திரா அந்த காணொளியை வெளியிட்டு பூரிப்பு அடைந்துள்ளார்.
https://twitter.com/anandmahindra/status/1731932517295640697
தங்களின் தயாரிப்பு மற்ற வாகனங்களை விட எவ்வளவு மேம்பட்டது என்று இந்த வீடியோ மூலம் சொல்லாமல் சொல்லி இருக்கிறார் ஆனந்த் மஹிந்திரா.