அஜித், விஜய் செய்யல… ஆனா இவரு செஞ்சாரு…!
சென்னை: பெரிய நடிகர்கள் யாரும் எதுவும் செய்யல, நீங்க செஞ்சீங்க, அந்த மனசு தான் கடவுள் என்று நடிகர் ஹரிஷ் கல்யாணை பலரும் பாராட்டி வருகின்றனர்.
எது நடக்கக்கூடாது என்று நினைத்தோமோ அதே கடைசி கட்டத்தில் மிக்ஜாம் ரூபத்தில் சென்னையில் நடந்தே விட்டது. அடி வெளுத்து வாங்கிய பேய் மழையில் இன்னமும் சென்னை மீளவில்லை.
மழை நின்றுவிட்ட போதிலும் எங்கும் காட்சி தரும் வெள்ளம், நீர் மக்களை அய்யோ என்று கதற வைத்துள்ளது. வாகனங்கள் வலம் வந்த சாலைகளில் இன்று படகுகள் வலம் வர ஆரம்பித்துள்ளன. மக்கள் காப்பாற்றப்பட்டு உள்ளனர்.
போர் நேரத்தில் எல்லையில் சுற்றும் ஹெலிகாப்டர்கள் காங்கிரீட் காடுகள் காணப்பட்டு இப்போது தண்ணீர் தேசமாய் பரிதவிக்கும் சென்னையின் புறநகர் பகுதிகளில் சுற்றி வருகின்றன.
மழை நின்றுவிட்டது.. ஆனால் நிவாரண பணிகளும் உதவிகளும் நிற்க வில்லை. சாதாரண மனிதர் முதல் தன்னார்வம் கொண்ட இளைஞர்கள் என சாதி மதம் பாராமல் பலரும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்டி உள்ளனர்.
அந்த வகையில் இளம் நடிகர் ஒருவர் மற்றவர்களுக்கு முன் உதாரணமாக திகழ்ந்து பாராட்டுக்களை பெற்றிருக்கிறார். அவர் நடிகர் ஹரிஷ் கல்யாண்..!
சென்னைக்கு கரம் கொடுப்போம் என்று எண்ணிய அவர், மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு 1 லட்சம் ரூபாய்க்கான காசோலையை அனுப்பி ஆச்சரியம் காட்டி இருக்கிறார். இந்த விவரத்தை அவர் சமூக வலைதளம் தெரிவித்துள்ளார்.
https://twitter.com/iamharishkalyan/status/1732301645944680559
அவரின் இந்த செயலை பார்த்து பலரும் பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர். அரசிடம் நிதி தருவது நல்லது, ஆனால் அதற்கான பொருட்களை நீங்களே வாங்கி, நேரில் சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கலாம் என்று சிலர் யோசனை தெரிவித்துள்ளனர்.
இன்னும் பலர், பிரபல நடிகர்களுக்கு இல்லாத மனது உங்களிடம் உள்ளது… அந்த மனசு தான் சார் கடவுள் என்று வாழ்த்து கூறி இருக்கின்றனர். மேலும் ஒரு சிலர், நடிகர்கள் அஜித், விஜய்… உங்களுக்கு இதெல்லாம் கேட்டுச்சா? என்றும் போட்டு தாக்கி இருக்கின்றனர்.