Sunday, May 04 11:44 am

Breaking News

Trending News :

no image

#Ponmudi நீதிபதி யார்…? தோண்டி துருவி வீடியோ போட்ட திமுக


சென்னை: பொன்முடிக்கு சிறை தண்டனை வழங்கிய நீதிபதி அதிமுக ஆட்சியில் என்னவாக இருந்தார் என்று திமுக தரப்பு வெளிச்சம் போட்டு காட்டி இருக்கிறது.

பெரும் பரபரப்புகள், அரசியல் நகர்வுகளுக்கு இடையே இன்று அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது.

திமுகவுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படும் இந்த சம்பவம் கட்சியினருக்கு பெரும் அதிர்ச்சியையும், தலைமை மீதான கோபத்தையும் வெளிக்காட்டி உள்ளது. விழுப்புரம் ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் விடுதலையை ரத்து செய்து, தண்டனை விதித்திருப்பதாக கூறும் உடன்பிறப்புகள், வழக்கை சரியாக கையாளவில்லையோ என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்தி உள்ளதாக கதறி வருகின்றனர்.

பொன்முடி, திமுக ஆகிய 2 விஷயங்களை முன்வைத்து இணையவாசிகள் கமெண்ட்டுகளை அள்ளி வீசிக் கொண்டிருக்க, தீர்ப்பளித்த நீதிபதி ஜெயச்சந்திரன் யார் என்று ஆராய்ச்சி செய்து கொண்டு இருக்கிறது திமுக. அவர் யார் என்றும் அதிமுக ஆட்சியில் என்னவாக இருந்தார் என்றும் கூறி உள்ளது.

இந்த விவரங்களை பொன்முடி தரப்பில் நீதிமன்றத்தில் ஆஜரான வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ செய்தியாளர்களிடம் விவரித்து உள்ளார். அவரது பேட்டியை திமுக IT WING தமது பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறது.

https://twitter.com/DMKITwing/status/1737798153204912155

அதில் அவர் கூறி இருப்பதாவது: எங்களை பொறுத்தவரை நீதிபதி ஜெயச்சந்திரன் அப்பழக்கற்றவர், சந்தேகங்கள் அனைத்துக்கும் அப்பாற்பட்டவர். ஆனால் சட்டத்தின் படி, அவர் அதிமுக ஆட்சியில் சட்டத்துறை செயலாளராக பணியாற்றினார்.

அப்போது இந்த வழக்கில் சொத்துகளை முடக்கம் செய்வதற்கான கோப்புகளில் கையெழுத்து போட்டுள்ளார். அப்படி இருக்கும் போது, இதை latent bias என்று கூறுவோம்.

இந்த விவரம் வழக்கை நடத்தும் போது தெரியவரவில்லை, நேற்றைக்கு தான் பொன்முடிக்கு தெரிந்தது. அதை நீதிமன்றத்தில் தெரிவித்தோம். இது முழுக்க, முழுக்க சட்டம் சார்ந்த பிரச்னை. நிச்சயமாக உச்சநீதிமன்றத்தில்  மேல்முறையீடு செய்யும் போது முன் வைப்போம் என்று கூறினார்.

வழக்கை நடத்தும் போது எதையும் உன்னிப்பாக கவனிக்காமல் இப்போது தண்டனை விதிக்கப்பட்ட பின்னர் இதை பற்றி பேசுவது ஏனோ என்ற கேள்வி அரசியல் விமர்சகர்கள் மத்தியில் தற்போது எழுந்துள்ளது.

Most Popular