கொரோனா குறைந்தாலும் ஏசி பெட்டிகளில் போர்வைகள் தரமாட்டோம்…! ரயில்வே அறிவிப்பு
டெல்லி: கொரோனா பாதிப்பு குறைந்தாலும் ஏசி பெட்டிகளில் போர்வைகள் தரப்படாது என்று ரயில்வே தெரிவித்துள்ளது.
இந்த தகவலை ரயில்வே வாரிய தலைவர் வினோத் குமார் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியதாவது: கொரோனா குறைந்த பிறகு ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய படுக்கைகள், பயணிகளே போர்வைகள், படுக்கை விரிப்புகளை கொண்டு வரவேண்டும் என்ற நடைமுறையை பின்பற்ற முடிவு செய்துள்ளோம்.
அதற்கான கொள்கைகள் வகுக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. ரயில் பயணத்தின் போது சுத்தத்தை கடைபிடிக்க ரயில்வே முடிவு செய்துள்ளது. ஒரு புதிய முயற்சியாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
500 ரயில்களின் சேவையை ரயில்வே நிர்வாகம் நிறுத்துவதாக வெளியான தகவல் உண்மையில்லை. எந்த ஒரு ரயில் சேவையையும் நிறுத்தவோ, ரயில் நிலையங்களை மூடவோ எந்த ஒரு முடிவும் எடுக்கப்படவில்லை என்றார்.