மேடையில் ‘டக்கென’ டான்ஸ்.. கலக்கிய பெண் கலெக்டர்…!
புதுக்கோட்டை: மாணவர்களின் வேண்டுகோளை ஏற்று மேடையில் பரத நாட்டியம் ஆடி அசத்தி இருக்கிறார் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு.
பொதுவாக, அரசு பொறுப்புகளில் இருப்பவர்கள் சதா டென்ஷனாக வலம் வருவதுண்டு. குறிப்பாக கலெக்டர்களுக்கு அதிக பணிசுமை இருப்பதால் மிகவும் டென்ஷனாகவே இருப்பதை பார்த்து இருப்போம்.
ஆனால், புதுக்கோட்டை கலெக்டர் எப்போதும் இனிய சுபாவத்துடன் அனைவரிடமும் பழகக்கூடியவர். அதன் காரணமாகவே எளிய மக்களும் அவரை அணுகி குறைகளை கூறுவது உண்டு.
இந் நிலையில் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியின் ஆண்டு விழாவுக்கு சென்ற அவர் டக்கென்று பரத நாட்டியம் ஆடி அனைவரையும் அட என்று சொல்ல வைத்திருக்கிறார். மாணவர்களின் கோரிக்கையை ஏற்று அவர் நடனம் ஆடி அசத்தி இருக்கிறார்.
அதிலும் அவர் ஆடிய யமுனை ஆற்றிலே பாட்டுக்கு மாணவர்கள் தரப்பில் இருந்து எழுந்த கரவொலி அடங்க நீண்ட நேரம் ஆனது. அவரை நடனத்தை பார்த்து வாழ்த்துகளையும் தெரிவித்தனர். கவிதா ராமு ஐஏஎஸ் ஆகும் முன்னர், பரதநாட்டியத்தை முறைப்படி கற்றவர் என்பதை விழாவில் தான் பலரும் அறிந்து கொண்டனர் என்பது தான் விசேஷம்.