Sunday, May 04 12:04 pm

Breaking News

Trending News :

no image

இந்தியாவில் 2021ம் ஆண்டு வரை கொரோனா இருக்கும்..! எய்ம்ஸின் எச்சரிக்கை


டெல்லி: இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் 2021ம் ஆண்டு வரை இருக்கும் என்று எய்ம்ஸ் அறிவித்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா தாக்கம் ஒருபக்கம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்தியாவிலும் அது விதிவிலக்கல்ல. ஒட்டு மொத்த பாதிப்பு 40 லட்சத்தை கடந்து அதிர்ச்சி தருகிறது.

பாதிப்புகள் ஜெட் வேகத்தில் இருக்க… நாள்தோறும் ஊரடங்கு தளர்வுகள்  அறிவிக்கப்பட்டு கொண்டே வர மக்களிடையே இயல்பு நிலை மீண்டது போல தோற்றம் வருகிறது.  

ஆனால் இந்தியாவில் தினசரி 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்  கொரோனாவால் பாதிப்படைந்து வருகின்றனர். இந் நிலையில் இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் 2021ம் ஆண்டு வரை இருக்கும் என்று எய்ம்ஸ் கூறியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நாட்டி பல பகுதிகளில் 2வது கொரோனா அலை வீசி வருவதாக எய்ம்ஸ் இயக்குனர் டாக்டர் ரந்தீப் கூறி உள்ளார். கொரோனாவால் நோயாளிகளின் எண்ணிக்கை இனி அடுத்து வரக்கூடிய நாட்களில் அதிகரிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

Most Popular