மக்களே… உஷார்…! கொரோனா வைரஸ் காற்றில் 30 அடி தூரம் பரவும்…!
டெல்லி: கொரோனா வைரசின் நீர்த்துளிகள் 30 அடி தூரம் வரை காற்றில் பரவக்கூடியது என்று மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
கொரோனாவின் 2வது அலையின் தாக்கம் இன்னமும் குறைந்தபாடில்லை. நாள்தோறும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதில் தேவையான ஆலோசனைகளை மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் அலுவலகம் புதிய வழிகாட்டல்களை வெளியிட்டு உள்ளது.
அந்த வழிகாட்டல்களில் காற்றோட்ட வசதி என்பது மிகவும் முக்கியம் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்த வசதியானது வீடுகளிலும், பணியிடங்களிலும் ரொம்ப முக்கியம் என்றும் கூறி உள்ளது. அறிகுறியற்ற நபர்களும் கொரோனா தொற்று பரப்பாளர்களாக மாறும் வாய்ப்புகள் உள்ளன.
மாஸ்க், சமூக இடைவெளி ஆகியவற்றை கடைபிடிப்பதோடு, கிருமி நாசினி கொண்டு கைகளை அடிக்கடி சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். ஒரு நபருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருந்தால் அவரின் இருந்து கொரோனா வைரஸ் நீர்த்துளிகள் 30 அடி தூரம் வரை காற்றில் பயணம் செய்யும்.
ஆகையால் தகுந்த பாதுகாப்பு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்வது அவசியம். டபுள் மாஸ்க், என் 95 மாஸ்க் அணிந்து கொள்வது அதிக பாதுகாப்பானது என்று வழிகாட்டல் முறைகளில் குறிப்பிடப்பட்டு உள்ளது.