இன்றைய TOP 10 News…!
தேசிய அளவிலும், தமிழகத்திலும் இன்றைய தினத்தின் டாப் 10 செய்திகளை பார்க்கலாம்:
தமிழகத்தில் கோவை, நெல்லை, தென்காசி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தின் முக்கிய கட்டமாக தேசிய புலனாய்வு முகமையான என்ஐஏ அதிகாரிகள் ஆளுநர் மாளிகையில் ஆய்வு செய்தனர்.
இந்தியாவில் அன்னிய நேரடி முதலீடு அதிகரித்து உள்ளதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறி உள்ளார்.
தொடரும் விலை உயர்வின் காரணமாக வெளிநாடுகளில் வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு அதிரடியாக தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
தெலுங்கானாவில் மகளிர் இலவச பேருந்து சேவை திட்டத்தை நடைமுறைப்படுத்தும் வகையில், மகாலட்சுமி திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது.
தமிழகம் முழுவதும் 3000 இடங்களில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்களுக்கு இன்று ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
சென்னை மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு பகுதிகளை போர்க்கால அடிப்படையில் அதிகாரிகள் தூய்மைப்படுத்த வேண்டும் என்று தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா அறிவுறுத்தி உள்ளார்.
567வது நாளாக சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் எவ்வித மாற்றமும் இன்றி 102.63 ரூபாய்க்கும், டீசல் 94.24 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
சற்று மட்டுப்பட்டு இருந்த கொரோனா தொற்று சிங்கப்பூரில் மீண்டும் அதிகரித்து இருப்பது உலக நாடுகளை கவலை கொள்ள வைத்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில் 32 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பெண்கள் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடருக்கான வீராங்கனைகள் இன்று ஏலம் மூலம் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இந்த தொடர் அடுத்தாண்டு பிப்-மார்ச் ஆகிய மாதங்களில் நடத்தப்படுகிறது.