நடிகர் சிவகார்த்திகேயன் அப்பா பற்றி மீண்டும் வாய் திறந்த ஹெச். ராஜா…!
காரைக்குடி: நடிகர் சிவகார்த்திகேயன் தந்தை பற்றி தவறாக பேசியதற்காக வருத்தம் தெரிவித்து கொள்வதாக பாஜக மூத்த தலைவர் ஹெச் ராஜா பேசி உள்ளார்.
பாஜகவில் எப்போதும் எதையாவது பேசி வம்பில் சிக்கி கொள்ளும் சிலர் உள்ளனர். அப்படிப்பட்டவர்களில் ஒருவர் ஹெச் ராஜா. இந்த முறை நடிகர் சிவகார்த்திகேயன் அப்பா பற்றி பேசி சர்ச்சையில் மாட்டினார். ஜெய்லர் ஜெயபிரகாஷை கொலை செய்தது இன்றைய பாபநாசம் எம்எல்ஏ. ஜெய்லரின் மகன் தான் இப்போது நடிகராக இருக்கும் சிவகார்த்திகேயன் என்று பேசினார்.
ஹெச் ராஜாவின் இந்த பேச்சு பெரும் வைரலானது. இது குறித்து மனித நேய மக்கள் கட்சி அவர் மீது போலீசில் புகார் தந்தது. இந் நிலையில் தவறாக பேசி விட்டதாகவும், மன்னிக்க வேண்டும் என்றும் ஹெச் ராஜா கூறி இருக்கிறார்.
காரைக்குடியில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது: ஜெயிலர் ஜெயப்பிரகாசை கொன்றது அல் உம்மா உறுப்பினர் ஜவாஹிருல்லா. முன்பு நான் ஒரு பேட்டியில் கூறியது தவறு.
நடிகர் சிவகார்த்திகேயன் தந்தை காவல்துறையில் இருந்தார். ஆகையால் அவரது பெயரை தவறாக கூறி விட்டேன். அது என் தவறு. எந்த உள்நோக்கத்துடனும் நான் கூறவில்லை. அதற்காக வருத்தம் தெரிவித்து கொள்கிறேன் என்று கூறி உள்ளார்.