வருகிறது சனிப்பெயர்ச்சி…! திருநள்ளார் கோயிலில் குவிய தொடங்கிய பக்தர்கள்..! ஆனா ஒரு கண்டிஷன்…!
திருநள்ளார்: வரும் 27ம் தேதி சனிபெயர்ச்சி வர உள்ள நிலையில் திருநள்ளாரில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
வாக்கிய பஞ்சாங்கப்படி, மார்கழி 12ம் தேதியான டிசம்பர் 27ல் சனிப்பெயர்ச்சி நடைபெற உள்ளது. அன்று சனிபகவான் தனுசு ராசியில் உத்திராடம் நட்சத்திரத்தில் 1ம் பாகத்தில் இருந்து மகர ராசியின் உத்திராடம் 2ம் பாகத்துக்கு குடிபுகுகிறார்.
அதன் காரணமாக இன்று முதல் காரைக்காலை அடுத்த திருநள்ளாரில் உள்ள தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் பக்தர்கள் குவிய ஆரம்பித்துள்ளனர். இன்று சனிக்கிழமை என்பதால் காலை முதலே பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது.
ஆன்லைனில் முறையாக பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே அனுமதி என்று மாவட்ட நிர்வாகம் ஏற்கனவே அனுமதி அளித்துள்ளது. பக்தர்களுக்கு அனுமதி என்றாலும் கோயிலில் உள்ள நளன் குளத்தில் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.