நடிகர் சிவகார்த்திகேயன் சம்பளம் 2000 ரூபாயா..? வெளியான புது தகவல்
சென்னை: பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் பிரபல தொலைக்காட்சியில் இருந்த போது, அவர் வாங்கிய சம்பளம் வெறும் 2000 ரூபாய் தான் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் சிவகார்த்திகேயன். தனக்கென்று சினிமா உலகில் ஒரு இடத்தை பிடித்துள்ளார். அவரின் டாக்டர் படம், விரைவில் ரிலீசாக இருக்கிறது.
கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் அயலான், டான் ஆகிய படங்களும் வெளியீட்டுக்காக வெயிட்டிங்கில் காத்திருக்கிறது. இப்போது கோடிகளில் சம்பளம் வாங்கும் அவர் தொடக்க காலங்களில் எவ்வளவு சம்பளம் வாங்கி இருப்பார் என்று பலரும் தெரிந்து கொள்ள ஆசைப்பட்டாலும் உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை.
இப்போது அந்த விவரங்கள் பிரபல சீரியல் நடிகர் இர்பான் முகமது மூலம் வெளியில் வந்துள்ளது. பிரபல தொலைக்காட்சியில் ஆரம்ப காலங்களில் அவரது ஊதியமே 2000 ரூபாய் தானாம். குறைந்த சம்பளத்தில் தாம் அவர் தமது வாழ்க்கையை ஆரம்பித்து இருக்கிறாராம்.
அதன் பின்னர் விடா முயற்சி, கடும் உழைப்பு என அனைத்தும் ஒன்று சேர இன்று திரையுலகில் எட்டி பிடிக்க முடியாத இடத்தில் உள்ளார். அதே நேரத்தில் பழையதை மறக்காமல் இன்றும் அந்த தொலைக்காட்சி பெயரை சொன்னால் நட்போடும், நன்றி உணர்வோடும் நிறைய சம்பவங்களை சிவகார்த்திகேயன் நினைவு கூர்வாராம்….!