ரஜினிகாந்தின் ஆட்டோ ரிக்ஷா சின்னம்…! தேர்தல் ஆணையத்துக்கு போன முக்கிய கோரிக்கை
சென்னை: நடிகர் ரஜினிகாந்துக்காக பதிவு செய்து வைத்திருந்த ஆட்டோ ரிக்ஷா சின்னத்தை மக்கள் சேவை கட்சி திரும்ப தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைத்தது.
எப்படியும் கட்சி ஆரம்பிப்பார் என்று அனைத்து தரப்பினரும் காத்திருக்க, கடைசியில் உடல்நிலையை காரணம் காட்டி கட்சி தொடங்க போவது இல்லை என்று நடிகர் ரஜினிகாந்த் சில மாதங்கள் அறிவித்தார். அவரின் அறிவிப்பு வெளியான காலத்தில் தமிழகம் உள்பட 5 மாநில சட்டசபை தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படவில்லை.
அதன்பின்னர் தேர்தல் தேதி அறிவிக்கப்பட அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளில் முழு வீச்சில் களம் இறங்கி பணியாற்றி வருகின்றன. தேர்தலில் போட்டியிடும் கட்சிகளுக்கு தலைமை தேர்தல் ஆணையம் சின்னம் ஒதுக்கி வருகிறது.
இந் நிலையில், நடிகர் ரஜினிகாந்துக்காக பதிவு செய்யப்பட்ட மக்கள் சேவை கட்சி தமக்கு ஒதுக்கப்பட்ட ஆட்டோ ரிக்ஷா சின்னத்தை தலைமை தேர்தல் ஆணையத்திடம் திரும்ப ஒப்படைத்தது.