30 ஆண்டு 'கண்ணீர்' இது…! ஒத்த டுவிட்டில் கவனம் பெற்ற கமல்…!
சென்னை: பேரறிவாளனின் விடுதலைக்கு அற்புதத்தாயின் 30 ஆண்டு கால கண்ணீரை எப்போது துடைக்க போகிறோம் என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்து உள்ளார்.
ராஜிவ் காந்தி படுகொலை வழக்கில் 30 ஆண்டுகளாக முருகன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் சிறையில் உள்ளனர். அவர்களின் விடுதலைக்கு தமிழீழ அமைப்பினர், ஆதரவாளர்கள் போராடி வருகின்றனர்.
ஆனால் வருடங்கள் ஓடியதே தவிர அவர்கள் விடுதலையாவது தள்ளிக் கொண்டே போகிறது. ஆனாலும் எழுவர் விடுதலை தமிழகத்தில் சாத்தியமான ஒன்று என்று இப்போது பலரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இந் நிலையில் ராஜிவ்காந்தி படுகொலை வழக்கில் 30 ஆண்டுகளாக சிறையில் பேரறிவாளன் விடுதலை குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளா. இது குறித்து அவர் டுவிட்டர் பதிவுகளை வெளியிட்டு உள்ளார்.
அதில் அவர் கூறி இருப்பதாவது: மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "மகனை மீட்க உலகின் அத்தனைக் கதவுகளையும் தட்டி விட்டார் அற்புதம் அம்மாள். தன் உயிராற்றலின் ஒவ்வொரு துளியையும் அநீதியின் கொடுங்கரங்களில் சிக்கித் தவிக்கும் பேரறிவாளனின் விடுதலைக்கே செலவழித்த இந்த அற்புதத்தாயின் முப்பதாண்டு கண்ணீரை எப்போது துடைக்கப் போகிறோம்? என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.
கமல்ஹாசன் வெளியிட்டு உள்ள மற்றொரு டுவிட்டர் பதிவில் தெரிவித்து இருப்பதாவது:
நவீன உலகம் இவ்வளவு வளர்ந்த பிறகும் குழந்தைத் தொழிலாளர் முறை பற்றிப் பேசிக்கொண்டிருப்பது தகாது. பள்ளிகளும் திறவாத சூழலில், வேலைக்குப் போகக் கட்டாயப்படுத்தப்படும் சிறாரை நினைக்கப் பதைக்கிறது. நம் நாகரிகம் மேம்படட்டும் என்று கூறி உள்ளார்.