ஓட்டலில் சீமானும், கஸ்தூரியும்..! கழிசடைகளின் கவனத்துக்கு…!
சென்னை: சீமானுடன் தம்மை இணைத்து பேசுபவர்களுக்கு ஓங்கி அடிச்சா ஒன்னரை டன் வெயிட் என்கிற கணக்காய் ஒரு பதிவை வெளியிட்டு இருக்கிறார் நடிகை கஸ்தூரி.
சினிமா நடிகையான கஸ்தூரி, திரையுலகில் மட்டுமல்ல, ஊடக விவாதங்களில் பல்வேறு அடையாளங்களுடன் பேசி வருபவர்.சமூக வலை தளங்களில் இவர் வைக்கும் பதிவுகளும் பிரபலம்.
ஆனால் கடந்த சில நாட்களாக இவரை பற்றி சமூக வலைதளங்களில் வெளியாகி வரும் கருத்துகள், போட்டோக்கள் வேற ரகம். சீமானை கோவையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் சந்தித்தார், அவருடன் பேசினார் என்று இஷ்டம் போல பலரும் சமூக வலைதளத்தில் கழுவி ஊற்றினர்.
அதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும், சீமானை நம்பி ஏமாற வேண்டாம் என்றும் முன்னாள் நாம் தமிழர் கட்சியினர் பொங்கி தள்ளினர். இதுபோன்ற பதிவுகளுக்கு நாம் தமிழர் தொண்டர்கள் உள்ளே புகுந்து காட்டடி அடித்தாலும், விவகாரம் நிற்பதாக தெரியவில்லை.
இதையறிந்த நடிகை கஸ்தூரி ஒரு நீண்ட விளக்கம் கொடுத்துள்ளார். முகநூல் பக்கத்தில் அவர் கூறி உள்ளதாவது:
https://www.facebook.com/actresskasthuri
சீமானையும் என்னையும் இணைத்து பொய் அவதூறு பரப்புவது என்ற உத்தியை திமுக தரப்பினர் முனைப்புடன் செயல்படுத்துவதின் காரணம் - ஒரே கல்லில் இரண்டு மாங்காய்.
1) திமுகவிற்கும் அதை அண்டி பிழைப்பவருக்கும் தலைவலியாக இருக்க கூடிய தமிழர் தலைவரை தாக்கி அதன் மூலம் நாம் தமிழர் தம்பிகளை அவநம்பிக்கை அடைய செய்வது.
2) என் அரசியல் விமர்சனத்துக்கும் கேள்விகளுக்கும் பதில் சொல்ல துப்பில்லாமல் கேள்வி கேட்பவளை ஆபாசமாக தாக்கி பிரச்சினையை மடைமாற்றுவது.
இதற்கெல்லாம் பயந்தவள் நானில்லை.
Feb 2019 முதல் வாரம் from 2nd to 8th Feb நான் என் கணவர் குழந்தைகளோடு எங்கிருந்தேன் என்று என்னால் நிரூபிக்கமுடியும்.
இந்த தேதியில் நான் கோவைக்கு வந்ததாக எங்கே, ஒரு ஆதாரம் காட்டு பார்ப்போம்?
இப்படி பொய் சொல்லி பிழைக்கும் ப்ரோக்கர் பயலுகளை பார்த்து அறுவெருப்பதா, அவர்களின் குடும்பத்தினரை நினைத்து பரிதாப ப்படுவதா, இதுகளுக்கு 'அறிவார்ந்த ' பட்டம் குடுத்த அறிவாளிகளை நோவதா என்று கஸ்தூரி கூறி இருக்கிறார்.
ஆஹா… விளக்கம் தந்தாகிவிட்டது. விவகாரம் ஓவர் என்று நினைத்திருந்தால்… முன்பை விட இப்போது இஷ்டத்துக்கு கம்பு சுற்ற ஆரம்பித்துள்ளனர். இந்த விஷயத்தை அப்படியே விட்டிருந்தாலும் அதுபாட்டுக்கு தானா மறந்துடும், இப்ப விளக்கம் வேற கொடுத்து விஷயத்தை அடுத்த modeக்கு மாத்தி விட்டுட்டாங்க என்ற பேச்சு தான் ஓடுகிறது…!