800 படத்தில் இருந்து விலகுகிறார் விஜய் சேதுபதி..! முரளிதரனே போகுமாறு கடிதம்
சென்னை: முரளிதரனின் வேண்டுகோளை ஏற்று 800 படத்தில் இருந்து விலக விஜய்சேதுபதி முடிவு செய்துள்ளார்.
பிரபல இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரனின் வாழ்க்கையை மையமாக வைத்து 800 என்ற பெயரில் படம் தயாராகிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதி நடிக்க எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன.
தமிழ் அமைப்புகள், அரசியல் கட்சிகள் மட்டுமின்றி திரையுலகை சேர்ந்த பலரும் விஜய் சேதுபதி இப்படத்தில் நடிக்கக் கூடாது என்று கூறி வந்தனர். ஒரு கட்டத்தில் முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிப்பதில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என்று விஜய் சேதுபதி தெரிவித்தார்.
இந் நிலையில் அந்த படத்தில் இருந்து விலக விஜய் சேதுபதி முடிவு செய்துள்ளார். 800 படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலக முரளிதரன் வேண்டுகோள் விடுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
முரளிதரனின் வேண்டுகோளை மேற்கோள் காட்டி நன்றி... வணக்கம்... என விஜய்சேதுபதி தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். இதையடுத்து, 800 படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகுவது உறுதியாகி உள்ளது.