அதிமுகவின் 171 தொகுதி வேட்பாளர் பட்டியல் ரிலீஸ்.! 3 அமைச்சர்களுக்கு கல்தா….!
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக போட்டியிடும் ஒட்டு மொத்த வேட்பாளர்கள் பட்டியலும் வெளியிடப்பட்டு உள்ளது.
வரும் ஏப்ரல் 6ம் தேதி தமிழக சட்டசபைக்கு தேர்தல் நடக்கிறது. அதற்கான தேர்தல் பணிகளில் அனைத்து கட்சிகளும் மும்முரமாக உள்ளன. இந் நிலையில் அதிமுகவின் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.
அதன்படி மொத்தம் 171 தொகுதிகளில் அதிமுக போட்டியிடுகிறது. பாமக, பாஜக வேட்பாளர்கள் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து அதிமுக தலைமை வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:
சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களாகக் கீழ்க்கண்டவர்கள் கீழ்க்காணும் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு நிறுத்தப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஆவடியில் க. பாண்டியராஜனும், அண்ணாநகரில் கோகுல இந்திரா, சைதாப்பேட்டையில் சைதை சா. துரைசாமியும் போட்டியிடுகிறார்கள். ஏற்கனவே முதல்வர், துணை முதல்வர் உள்பட 6 வேட்பாளர்கள் அடங்கிய முதல் பட்டியல் வெளியிடப்பட்டிருக்கும் நிலையில், இந்த பட்டியலில் 171 தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது.
சென்னை மாவட்டத்துக்குள்பட்ட பேரவைத் தொகுதிகளுக்கான வேட்பாளர்கள்:
மதுரவாயல் - பா. பென்ஜமின்
அம்பத்தூர் – அலெக்சாண்டர்
மாதவரம் - மாதவரம் வி. மூர்த்தி
திருவொற்றியூர் - கே. குப்பன்
ஆர்.கே. நகர் - ஆர்.எஸ். ராஜேஷ்
கொளத்தூர் – ஆதிராஜாராம்
வில்லிவாக்கம் - ஜேசிடி பிரபாகர்
அண்ணாநகர் - கோகுல இந்திரா
விருகம்பாக்கம் – விருகை தியாகராயநகர் - பி. சத்திநாராயணன்
மயிலாப்பூர் - ஆர். நட்ராஜ்
வேளச்சேரி – எம்.கே. அசோக்
சோழிங்கநல்லூர் - கே.பி. கந்தன்
ஆலந்தூர் - பா. வளர்மதி
ஸ்ரீபெரும்புதூர் (தனி) - கே. பழனி
பல்லாவரம் - சிட்லபாக்கம் ச. ராசேந்திரன்
தாம்பரம் - டி.கே.எம். சின்னய்யா
இது தவிர முக்கிய வேட்பாளர்களாக
ஜோலார்பேட்டை - கே.சி. வீரமணி,
வேப்பனஹள்ளி - கே.பி. முனுசாமி
பாலக்கோடு - கே.பி. அன்பழகன்
பாப்பிரெட்டிபட்டி - ஏ. கோவிந்தசாமி
ஆரணி - சேவூர் எஸ். ராமச்சந்திரன்
ராசிபுரம் - வி. சரோஜா
குமாரபாளையம் - பி. தங்கமணி
ஈரோடு (மேற்கு) - கே.பி. இராமலிங்கம்
பவானி - கே.பி. கருப்பணன்
கோபிச்செட்டிப்பாளையம் - கே.ஏ. செங்கோட்டையன்
செங்கல்பட்டு - எம். கஜேந்திரன்
செய்யூர் (தனி) - எஸ். கணிதாசம்பத்
மதுராந்தகம் (தனி) - மரகதம் குமரவேல்
உத்திரமேரூர் - வி. சோமசந்தரம்
அரக்கோணம் - சு. ரவி
காட்பாடி - வி. ராமு
ராணிப்பேட்டை- எஸ்.எம். சுகுமார்
வேலூர் - எஸ்.ஆர்.கே. அப்பு
அணைக்கட்டு - த. வேலழகன்
குடியாத்தம் (தனி) - ஜி. பரிதா
வாணியம்பாடி - ஜி. செந்தில்குமார்
ஆம்பூர் – நஜர்முஹம்த்
ஊத்தங்கரை - டி.எம். தமிழ்செல்வம்
பர்கூர் - ஏ. கிருஷ்ணன்
ஓசூர் - ஜோதி பாலகிருஷ்ணா ரெட்டி
செங்கம் - எம்.எஸ். நைனாக்கண்ணு
கலசப்பாக்கம் - வி. பன்னீர்செல்வம்
போளூர் - அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி
ஆகியோர் அதிமக சார்பில் போட்டியிடுவார்கள்.