#Corona அப்பல்லோவில் அதிமுக எம்.பி…! கிலியில் தொண்டர்கள்
சென்னை: சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அதிமுக முக்கிய புள்ளியும், முன்னாள் அமைச்சருமான சிவி சண்முகம் சேர்க்கப்பட்டு உள்ளார்.
அதிமுகவில் சட்டத்துறை அமைச்சராக இருந்தவர் சிவி சண்முகம். ஆன்மீகத்தின் மீது பக்தி உடையவர். சபரிமலைக்கு மாலை போட்டிருந்த அவர் கடந்த 18ம் தேதி சபரிமலைக்கு சென்றுவிட்டு ஊர் திரும்பி உள்ளார்.
தரிசனம் முடித்திருந்த நிலையில் சிவி சண்முகத்துக்கு லேசாக காய்ச்சல் இருந்ததாக தெரிகிறது. பின்னர் நேற்று சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையான அப்பல்லோவில் பரிசோதனை செய்து கொண்டார்.
அப்போது அவருக்கு கொரோனா தொற்று தாக்கியிருப்பது தெரிந்தது. உடனடியாக அங்கு மருத்துவர்கள் கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளார்.
சிவி சண்முகம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருக்கும் விவரம் அறிந்த அவரது ஆதரவாளர்கள், தொண்டர்கள் அனைவரும் பீதியில் உள்ளனர். முறையான மருத்துவ பரிசோதனையை அவர்கள் செய்து கொள்ள வேண்டும் என்று கட்சியின் மூத்த நிர்வாகிகள் அறிவுறுத்தி இருக்கின்றனர்.