கேட்டோம்… கொடுத்திட்டாங்க…! காங். 9 தொகுதிகள்…!
நாங்கள் கேட்டோம், அந்த 9 தொகுதிகளையும் திமுக தலைமை கொடுத்துள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறிவித்து, லோக்சபா 2024 தேர்தலுக்கான தொகுதி ஒதுக்கீடு ஒப்பந்தத்தையும் வெளியிட்டு உள்ளது.
லோக்சபா தேர்தல் 2024ல் திமுக தலைமையிலான கூட்டணி தமிழகத்தில் புதிய வேகத்துடன் செயல்படுவதாக தோன்றுகிறது. கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி தொகுதிகளை பங்கீட்டு, தாம் போட்டியிடும் 21 தொகுதிகளையும் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு திமுக, 9 தொகுதிகளை தந்துள்ளது. புதுச்சேரியையும் திமுக ஒதுக்கி உள்ளது. நாங்கள் என்ன தொகுதிகள் வேண்டும் என்று கேட்டோம், அவற்றை திமுக தந்திருக்கிறது என்று அக்கட்சியின் தமிழக தலைவர் செல்வ பெருந்தகை மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளார்.
அதன் முழு பட்டியல் இதோ;
✦ திருவள்ளூர் (தனி)
✦ கடலூர்
✦ மயிலாடுதுறை
✦ சிவகங்கை
✦ திருநெல்வேலி
✦ கிருஷ்ணகிரி
✦ கரூர்
✦ விருதுநகர்
✦ கன்னியாகுமரி
----
✦ புதுச்சேரி
------