தமிழகத்தில் இனி ரயிலில் போகலாம்..! 9 ரயில்கள் அறிவிப்பு
சென்னை: தமிழகத்திற்கு 9 சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்குகிறது.
கொரோனா காரணமாக மார்ச் முதல் ஊரடங்கு உத்தரவு தமிழகம் முழுவதும் பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த ஊரடங்கு செப்டம்பர் இறுதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
ஆனாலும் பல தளர்வுகளை மத்திய, மாநில அரசுகள் அறிவித்து உள்ளன. முக்கிய அம்சமாக பேருந்து போக்குவரத்து மாவட்டங்களுக்கு இடையே தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் ரயில் சேவை தொடங்கப்படவில்லை.
இந் நிலையில் தமிழகத்திற்கு 9 சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. அந்த ரயில்கள் பற்றிய விவரங்களையும் வெளியிட்டு உள்ளது.
அதன் விவரம் வருமாறு: சென்னை சென்ட்ரல் - கோவை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ், சென்னை -கோவை இடையே இரவு நேர சிறப்பு ரயில், சென்னை எழும்பூர் - திருச்சி, கோவை - மயிலாடுதுறை, சென்னை எழும்பூர் - காரைக்குடி, மதுரை, தூத்துக்குடிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன எனறு தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.