இன்று முதல் பைக்கில் வேலைக்கு போக முடியாது..!
சென்னை: இ பதிவு முறையில் தமிழக அரசு மீண்டும் மாற்றங்களை செய்து அதற்கான அரசாணையை வெளியிட்டு உள்ளது.
தமிழகத்தில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை எங்கோ போய்விட்டது. என்ன நடவடிக்கை எடுப்பது என்று தொடர்ந்து விவாதித்து, ஆலோசித்து, கடைசியில் ஒரு வார தளர்வுகளற்ற முழு ஊரடங்கை தமிழக அரசு நடைமுறைப்படுத்தி உள்ளது.
இந் நிலையில் இ பதிவில் தமிழக அரசு மீண்டும் சில மாற்றங்களை கொண்டு வந்து அறிவித்து இருக்கிறது. அதற்கா அரசாணை திமுகவின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டு இருக்கிறது.
அதன்படி இன்று முதல் தொழிற்சாலைகளில் பணிபுரியும் பணியாளர்கள், 2 சக்கர வாகனங்களில் பணிக்கு செல்லக்கூடாது. அதற்கு பதிலாக ஆலைகளில் உள்ள வாகனங்களை இ பதிவு செய்து கொள்ள வேண்டும். ஆலைகளில் பணியாற்றுவோரை அழைத்து செல்ல இ பாஸ் பெற்றிருந்தால் மட்டும் அழைத்து வர அனுமதிக்கப்பட்டுள்ளது.
2 சக்கர வாகனங்களை பயன்படுத்தாமல் 4 சக்கர வாகனங்களை நிறுவனங்கள் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.