Sunday, May 04 01:00 pm

Breaking News

Trending News :

no image

நான் மீசை வச்ச பொம்பள…! அடி தூள் பண்ணும் கேரளத்து சேச்சி…


திருவனந்தபுரம்: எனக்கு பிடிச்சிருச்சுக்கு, அதனால் மீசை வளர்க்கிறேன் என்று கூறி ஆச்சரியம் காட்டியிருக்கிறார் கேரள பெண் ஒருவர்.

ஆண்களின் அடையாளம் என்று பெரும்பாலும் கூறுவது மீசை தான். உலகளவில் வித்தியாசமான மீசைகள் வைத்த பலரை பார்த்து இருப்போம். ரசித்திருப்போம்.

ஆனால்…. முற்றிலும் வித்தியாசமாக, கேரளாவில் பெண்மணி ஒருவர் ஆசை, ஆசையாய் மீசை வளர்த்து வருகிறார்… அதோடுதான் வலம் வருகிறார்.

அவரது பெயர் ஷைஜா. வயது 35… கண்ணூரை சேர்ந்த பெண். தமக்கு மீசை வளர்க்க வேண்டும் என்பதில் ஆர்வம் அதிகம் கொண்டவர். முறுக்கு மீசையுடன் அவரின் போட்டோ வாட்ஸ் அப் ஸ்டேட்ஸ்சில் வைக்க ஏக பிரபலமாகி இருக்கிறார்.

5 ஆண்டுகளாக மீசையுடன் காட்சி தரும் இவர், அதை அகற்றவது என்பது பிடிக்காது என்கிறார். தொடக்கத்தில் கேலி, கிண்டல்களுக்கு மத்தியில் வாழ்க்கையை நகர்த்தினாலும் பின்னாளில் அதுவே பழக்கமாகிவிட்டது, இப்போது மீசை இல்லாமல் இருக்கவே முடியவில்லை என்று கூறி கலகலப்பு மூட்டுகிறார் ஷைஜா.

மீசை வளர்க்க வேண்டும் என்பது எனது விருப்பம், வளர்க்கிறேன், இதனால் நான் அழகாக இல்லை என்று நினைத்ததே இல்லை என்று கூறி அசத்துகிறார். ஷைஜா மீசையுடன் உலா வருவதை அவரது குடும்பத்தினர் வரவேற்று உள்ளதோடு ஆதரவும் தெரிவித்துள்ளனர் என்பது தான் சிறப்பம்சம்.

மீசை இல்லாமல் இனி வாழ்க்கையே இல்லை என்று சிரிக்கிறார் இந்த கேரளத்து மீசை நாயகி…..!

Most Popular