அம்மாடியோவ்…! தமிழகத்தில் ஒரே நாளில் 19, 588 பேருக்கு கொரோனா…! 147 பேர் மரணம்…!
சென்னை: தமிழகத்தில் இன்று 19588 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
இது குறித்து தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளதாவது: இன்றைய 19588 பேருடன் சேர்த்து தமிழகத்தில் தற்போது வரை 11, 86,344 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இன்று மட்டும் 1, 51,452 பேர் கொரோனா சோதனை செய்து கொண்டு உள்ளனர்.
இத்துடன் சேர்த்து தமிழகத்தில் ஆர்டி பிசிஆர் சோதனை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை 2,28, 13,859 பேராகும். இன்று மட்டும் 17,164 பேர் டிஸ்சார்ஜ் ஆகி இருக்கின்றனர். இன்று 147 பேர் கொரோனாவால் உயிரை இழந்துள்ளனர். அவர்களில் 55 பேர் தனியார் மருத்துவமனைகளிலும், 92 பேர் அரசு மருத்துவமனைகளிலும் பலியாகி உள்ளனர்.
மாவட்டங்களின் அடிப்படையில் பார்த்தால் சென்னையில் இன்று ஒருநாள் மட்டும் 5829 பேர் புதியதாக கொரோனா தொற்றுக்கு ஆளாகி இருக்கின்றனர். அதற்கு அடுத்து செங்கல்பட்டில் 1445 பேரும், கோவை மாவட்டத்தில் 1257 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். குறைந்த அளவாக பெரம்பலூரில் 43 பேர் இன்று மட்டும கொரோனா தொற்றால் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.