Sunday, May 04 11:52 am

Breaking News

Trending News :

no image

திமுகவுக்கு தாவுகிறாரா… முன்னாள் அமைச்சர்…?


சென்னை: நான் திமுகவில் சேருகிறேனா இல்லையா என்பது விரைவில் தெரிய வரும் என்று அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் நிலோபர் கபில் கூறி உள்ளார்.

அதிமுக ஆட்சியின் போது அமைச்சராக இருந்தவர் நிலோபர் கபில். கடந்த சில நாட்களுக்கு முன்பாக கட்சியியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். அவரது உதவியாளர் அளித்த 6 கோடி ரூபாய் புகார், பணமோசடி என பல சர்ச்சைகளின் தொடர்ச்சியாக அவர் கட்சியில் இருந்து கட்டம் கட்டப்பட்டு இருக்கிறார்.

அதிமுகவில் இருந்து தம்மை நீக்கிவிட்டதால் கவலைப்பட போவது இல்லை என்று நிலோபர் கபில் கூறி இருக்கிறார். இது குறித்து அவர் தெரிவித்து உள்ளதாவது:

கட்சியில் தலைமையானது என்னை மதிக்கவே இல்லை. கட்சியில் எந்த நிகழ்ச்சியானாலும் என்னை அழைக்கமாட்டார்கள். என்னுடைய தொகுதியிலும் யாரும் மரியாதை கொடுப்பது கிடையாது. ஆகையால் கட்சியில் இருந்து விலக போவதாக தலைமைக்கு கடிதம் போட்டேன்.

கொரோனாவால் எனது தாயார் இறந்து விட்டார். இது குறித்து திமுக மாவட்ட செயலாளர் தேவராஜ் என்னிடம் துக்கம் விசாரித்தார். சென்னை போகும் வழியில் அவரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன். கட்சியில் இருந்து டிஸ்மிஸ்  செய்துவிட்டதால் கவலையில்லை. என் மீது என்ன தவறு என்று ஒரு ஷோகாஸ் நோட்டீஸ் கூட கொடுக்கவில்லை. நீக்கியதற்கான காரணம் கூட சொல்லப்படவில்லை.

எனது உதவியாளர் பிரகாசம் பணம் வாங்கினார் என்பது எனக்கு தெரியாது. 6 கோடி ரூபாய் பணத்துக்காக நான் எனது பெயரை கெடுத்துக் கொள்வேனா..? எம்மீதான புகாரை நான் சட்டப்படி சந்திப்பேன். திமுகவில் சேருகிறேனா என்பது இப்போது கூறமுடியாது, விரைவில் அது பற்றி தெரிவிப்பேன் என்று கூறினார்.

Most Popular