Sunday, May 04 12:43 pm

Breaking News

Trending News :

no image

#ISPL சென்னை அணியை வாங்கிய பிரபல நடிகர்…! கிறுகிறுக்கும் கோலிவுட்


சென்னை: சென்னை கிரிக்கெட் அணியை பிரபல நடிகரான சூர்யா வாங்கி இருப்பது வைரலாகி வருகிறது.

திரையுலகில் நடிகர்கள் பலரும் திரையை கடந்து பல வியாபாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஓட்டல் மேனேஜ்மென்ட், ரியல் எஸ்டேட், பைனான்ஸ் என பல தொழில்களில் பணத்தை முதலீடு செய்து லாபம் அடைகின்றனர்.

வருவாயாக கிடைக்கும் பல கோடி ரூபாயை சிலர் மட்டுமே சமூக சேவை செய்து வருகின்றனர். அவர்களில் பலராலும் அறியப்படும் நடிகர் சூர்யாவும் ஒருவர். அகரம் அறக்கட்டளை மூலம் பல ஏழை எளியவர்களுக்கு மாணவர்களுக்கு உதவி செய்து வருகிறார்.

அவர் தற்போது கிரிக்கெட் அணி ஒன்றை வாங்கி அசத்தி இருக்கிறார். டி 20 போன்று டி 10 கிரிக்கெட் தொடர் இந்தியாவில் 2024 மார்ச் 2ம் தேதி தொடங்குகிறது. அதற்கான அணிகளை வாங்கும் முயற்சியில் பலரும் ஈடுபட்டு இருக்க நடிகர் சூர்யாவும் ஒரு அணியை வாங்கி இருக்கிறார்.

அந்த அணியின் பெயர் சென்னை. அணியை வாங்கிய அவர் இது குறித்து தமது எக்ஸ் வலைதள பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

https://twitter.com/Suriya_offl/status/1739883136669114873

நடிகர் சூர்யாவின் அறிவிப்பு அவரது ரசிகர்கள் மத்தியிலும் மட்டும் அல்லாது கிரிக்கெட் ஆர்வலர்களுக்கும் ஆச்சரியத்தையும், ஆனந்தத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

Most Popular