துண்டு சிகரெட்…. கிரிக்கெட்டை இழந்த இலங்கை வீரர்கள்…!
சிகரெட் ஊதி… இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தண்டனைக்கு ஆளாகி உள்ளனர்.
இங்கிலாந்துக்கு எதிரான டி 20 தொடரில் இலங்கை மகா மோசமான தோல்வியை சந்தித்தது. அடுத்து தொடங்கியது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர்.
இதில் தான் இலங்கை வீரர்களுக்கு வினையே ஆரம்பமானது. ஒருநாள் தொடருக்காக இலங்கை அணியினர் மருத்துவ பாதுகாப்பு வட்டத்துக்குள் பயிற்சி பெறு வருகின்றனர். அவர்களில் மெண்டிஸ், தனுஷ்கா குணதிலகா, நிரோஷன் டிக்வெல்லா ஆகியோருக்கு ஒரு யோசனை தோன்றி இருக்கிறது.
மருத்துவ பாதுகாப்பு வட்டத்தை விட்டு 3 பேரும் எஸ்கேப்பாகி உள்ளனர். அதன் பின்னர் நடந்தது தான் ஏக வம்பில் அவர்களை கொண்டு போய் விட்டுள்ளது. 3 பேரும் வெளியே வந்து கடைத்தெருவில் வந்து சிகரெட்டை வாங்கி ஹாயாக புகைத்து என்ஜாய் பண்ணி இருக்கின்றனர்.
அதை எங்கிருந்தோ பார்த்த குசும்புக்கார கிரிக்கெட் ரசிகர் தமது செல்போனில் பதிவு செய்து, இணைய உலகில் பரப்பிவிட்டார். அவ்வளவு தான்… தம் அடிக்கும் வீடியோ குபுக்கென்று இணையத்தில் வைரலானது.
விசாரணையை ஆரம்பித்த இலங்கை கிரிக்கெட் வாரியம்… என்கொய்ரியை ஆரம்பித்தது. அவர்கள் 3 பேரும் இலங்கைக்கு வரவழைக்கப்பட்டனர். தம்மடித்தது உண்மை என்று ருசுவாக…. ஓராண்டு 3 பேருக்கும் விளையாட கிரிக்கெட் வாரியம் தடை விதித்து அதிரடி காட்டி உள்ளது.