#SooraraiPottru சூப்பரா ஜெயிச்சிட்டியே மாறா…! முதல்முறையாக தேசிய விருது
டெல்லி: நடிகர் சூர்யாவுக்கு சூரரை போற்று படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்காக தேசிய விருது கிடைத்துள்ளது.
திரைத்துறையில் நாட்டின் சிறந்த விருதாக கருதப்படுவது தேசிய விருது. 68வது தேசிய விருதுகள் பற்றிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளன.
அதில் இந்த முறை பல எதிர்பாராத திருப்பங்கள் தமிழ் சினிமாவுக்கு கிடைத்திருக்கிறது. குறிப்பாக சூரரை போன்று படத்தில் நடித்த சூர்யா சிறந்த நடிகருக்கான தேசிய விருதுக்கு தேர்வு பெற்றுள்ளார். இதுதான் சூர்யாவுக்கு முதல் தேசிய விருதாகும்.
இது தவிர சிறந்த நடிகை விருது(அபர்ணா பாலமுரளி), பின்னணி இசை, படம், திரைக்கதை ஆகியவற்றுக்கான தேசிய விருதுகளையும் சூரரை போற்று படம் வென்றுள்ளது.
இயக்குநர் வசந்த் சாய் கைவண்ணத்தில் உருவான சிவரஞ்சனியும், இன்னும் சில பெண்களும் படம் மொழிவாரியான படங்களில் சிறந்த தமிழ் படமாக தேர்வாகி இருக்கிறது.
அறிமுக இயக்குநர் மடோன் அஸ்வின் டைரக்ஷனில் மண்டேலா படத்துக்கு சிறந்த வசனம், அறிமுக இயக்குநர் பிரிவுகளில் 2 தேசிய விருதுகள் கிடைத்துள்ளன.