Sunday, May 04 12:12 pm

Breaking News

Trending News :

no image

ரஜினிகாந்தை ஓவர்டேக் செய்த ‘ரசிக’சிகாமணி..! வாய் பிளந்த மன்றத்தினர்…!


சென்னை: ரஜினிகாந்தை விட 1 லட்சம் ரூபாய் அதிகமாக.. அதாவது 51 லட்சம் ரூபாயை கொரோனா நிவாரண நிதியாக தந்திருக்கிறார் அவரது ரசிகர்.

நாடு முழுவதும் கொரோனா 2வது அலை வேகமாகி வருகிறது. நாள்தோறும் பாதிப்பும், பலி எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே தான் இருக்கிறது. தமிழகத்திலும் பாதிப்பு சற்றும் குறையவில்லை. நாள்தோறும் பாதிப்பு சராசரியாக 30 ஆயிரத்தை கடந்து வருகிறது.

கொரோனா தொற்றில் இருந்து மக்களை காக்கும் நிவாரண பணிகளுக்கு அனைத்து தரப்பினலும் நிதி உதவி அளிக்க வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார். அவரின் வேண்டுகோளுக்கு பலன்கள் கிடைத்து வருகிறது.

அரசியல் பிரமுகர்கள், சமூக நல அமைப்பினர், பெரும் தொழிலதிபர்கள் என பல தரப்பினரும் கொரோனா நிவாரண நிதி வழங்கி வருகின்றனர். இந் நிலையில் கிருஷ்ணகிரி மாவட்ட ரஜினி மக்கள் மன்ற செயலாளர் சீனிவாசன் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து 51 லட்சம் ரூபாய் நிதி உதவி அளித்துள்ளார்.

அவர் தந்திருக்கும் நிதி குறித்து தான் இப்போது ரசிகர்கள் மத்தியில் பேச்சாக இருக்கிறது. காரணம்… ரஜினிகாந்த் கொடுத்த 50 லட்சம் ரூபாயை விட 1 லட்சம் கூடுதலாக சேர்த்து, 51 லட்சம் ரூபாயை கொடுத்து அசர வைத்து இருக்கிறார்.

ரசிகர் ஒருவரே 51 லட்சம் ரூபாய் கொடுத்திருக்கும் போது தலைவன் ரஜினிகாந்த் அதைவிட பன்மடங்கு அதிகம் தந்திருக்க வேண்டும் என்று இணையத்தில் ஒரு பேச்சு உலா வந்து கொண்டு இருக்கிறது. ஆனால் அதையும் ரஜினியின் அதி தீவிர ரசிகர்கள்… தலைவன் கொடுக்கும் ஒவ்வொரு ரூபாயும் கோடி ரூபாய்க்கு சமம் என்று கூறி பதிலடி தந்து வருகின்றனர்.

Most Popular