Sunday, May 04 12:45 pm

Breaking News

Trending News :

no image

கொரோனா… செப்டம்பர் மாதம் ஜாக்கிரதை…! நெஞ்சை பதற வைக்கும் நிபுணர்கள்


டெல்லி: கொரோனா 3வது அலை இந்தியாவில் செப்டம்பரில் உச்சத்தை தொடும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஒன்றரை ஆண்டுகள் கடந்துவிட்டது. ஆனாலும் கொரோனாவின் தாக்கம் குறையவில்லை. முதல் அலை, 2வது அலை என்று கடந்து இப்போது 3வது அலை காத்திருக்கிறது.எப்போது வரும் என்று தெரியாத நிலை தான் காணப்படுகிறது.

தடுப்பூசி பற்றாக்குறை ஒரு பக்கம் இருந்தாலும் கொரோனாவின் தாக்கம் குறையவில்லை என்பதே உண்மை. 3வது அலை எப்போது வரும் என்று தெரியாத நிலை இருக்கிறது.

இப்போது அதற்கு மருத்துவ நிபுணர்கள் பதில் தந்துள்ளனர். ஜூலை 4ம் தேதியே கொரோனா 3வது அலை தொடங்கிவிட்டதாக கூறுகின்றனர். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சில முக்கிய விவரங்கள் வருமாறு:

இந்த கொரோனா 3வது அலை மற்ற அலைகளை காட்டிலும் 1.7 மடங்கு ஆபத்தானதாக இருக்கும். ஆகஸ்டில் உயர ஆரம்பித்து, செப்டம்பரில் உச்சத்தை எட்டும்.

அதை தடுக்க பொதுமக்கள் அதிகளவில் தடுப்பூசி போட வேண்டும். தனிமனித இடைவெளி அவசியம். கொரோனா நோயாளிகளை கண்டறிந்து தனியாக சிகிச்சை அளிக்க வேண்டும்.

டபுள் மாஸ்க், சானிடைசர் பயன்படுத்த வேண்டும். இதன் மூலம் 3ம் அலையை கட்டுப்படுத்தலாம். போதிய மருந்துகள், ஆக்சிஜன் இருப்பை மாநில அரசுகள் உறுதி செய்து கொள்ள வேண்டும். மருத்துவமனைகளில் ஆக்சிஜன் படுக்கைகளை அதிகரிக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.

ஆக மொத்தம் கொரோனா 3வது அலை வருவது என்பது உறுதியாகிவிட்டது. அனைவரும் கொரோனா தடுப்பு வழிமுறைகளை மட்டும் பின்பற்றினால் தடுத்துவிடலாம் என்பதே இப்போது உள்ள நிலைமை…!

Most Popular