கொரோனாவில் மீண்டவர்களுக்கு ஆபத்து..! புது நோய் ‘அட்டாக்’…!
கொரோனாவில் இருந்து குணம் அடைந்தவர்களை புது விதமான நோய் தாக்கும் விவரம் வெளியாகி பெரும் அதிர்ச்சியை உண்டு பண்ணி இருக்கிறது.
கொரோனா இன்னமும் என்ன என்ன தொந்தரவுகளை மனித குலத்துக்கு அளிக்கும் என்பது தெரியாது. தொற்று பாதிப்புகள் ஒரு பக்கம் இருக்க அதில் இருந்து மீண்டவர்கள் புதுப்புது உடல்நிலை கோளாறுகளுக்கு ஆளாகி வருகின்றனர்.
பூஞ்சை தொற்று பாதிப்புகளை தொடர்ந்து இப்போது புதுவித பாதிப்புக்கு கொரோனாவில் இருந்து குணம் ஆனவர்கள் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். இந்த நோயின் பெயர் Avascular necrosis என்பதாகும். இது தாக்கினால் எலும்பில் உள்ள திசுக்களுக்கு ரத்த ஓட்டம் போகாது. எலும்புகள் செயல் இழந்து போகும் என்பது அதிர்ச்சி தகவல்.
மாஹிம் பகுதியில் உள்ள மருத்துவமனையில் கொரோனா தொற்றுக்கு சிலர் சிகிச்சை பெற்றனர். 2 மாதங்கள் கழித்து அவர்களில் 3 பேர் பேருக்கு புதுவித தொற்று இருப்பது தெரிய வந்திருக்கிறது. அவர்கள் வயது 40 வயது.
இந்த நோய் தாக்கிய அவர்களுக்கு தொடை எலும்பில் வலி வந்திருக்கிறது. 3 பேரும் டாக்டர்கள் என்பதால் இதன் தாக்கத்தை கண்டுபிடித்துள்ளனர். கொரோனாவில் இருந்து குணம் ஆனவர்கள் பூஞ்சை தொற்றுக்கு ஆளாகி உள்ளனர்.
இப்போது புதியதாக எலும்பு மரண நோய் (avascular necrosis) தாக்குகிறது. ஸ்டீராய்டு மருந்துகள் நோயாளிகளுக்கு அளிக்கப்படுவதால் இந்த நோய் பாதிக்கிறது. இதில் இன்னொரு அம்சம் கொரோனா தொற்றின் உச்சத்தின் போது நாள் கணக்கில் மக்கள் காத்திருந்து ரெம்டெசிவிர் மருந்து வாங்கி சென்றது நினைவிருக்கலாம்… அந்த மருந்தும் ஸ்டீராய்டு வகையை சேர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.