இவர்தான் ரஜினியின் அடுத்த பட இயக்குநரா..? கோலிவுட்டை கலக்கும் தகவல்
சென்னை: ரஜினிகாந்தின் அடுத்த படத்தை இளம் இயக்குநர் ஒருவர் இயக்க உள்ளதாக ஒரு தகவல் கோலிவுட்டில் தீயாய் பரவி வருகிறது.
நடிகர் ரஜினிகாந்த் இப்போது அமெரிக்காவில் உள்ளார். மருத்துவ சிகிச்சைக்காக சென்றுள்ள அவர் நாளை சென்னை திரும்புவார் என்று தெரிய வந்துள்ளது. ரஜினிகாந்த் சென்னையில் லேண்ட் ஆகும் முன்னதாக அவரின் அடுத்த படம் பற்றிய ஒரு தகவல் பரபரப்பாக பரவி கொண்டு இருக்கிறது.
ரஜினி அடுத்த படத்துக்கு தயாராகி விட்டதாகவும் அந்த படத்தை இளம் இயக்குநர் ஒருவர் இயக்குகிறார் என்று தகவல் இஷ்டத்துக்கு உலவி இருக்கிறது. அந்த படத்தை இயக்க உள்ளவர் இளம் இயக்குநர் தேசிங்கு பெரியசாமி, படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது என்றும் தகவல்கள் கசிந்தன. ஆனால் ரஜினிகாந்த் சென்னை வந்து அதன் பிறகே அவரின் அடுத்த படம் என்றும் ஒரு தகவல் உலாவி வருகிறது.
தலைவரின் அடுத்த படமா..? என்று அண்ணாத்தை எபெக்டுக்கு ரசிகர்கள் துள்ளி குதித்து வருகின்றனர். இயக்குநர் தேசிங்கு பெரியசாமி, முன்னதாக கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற படத்தை அவர் இயக்கி இருக்கிறார்.
இந்த படத்தில் துல்கர் சல்மான், ரக்ஷன்,கவுதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பலர் நடித்து இருந்தனர். நவீன காலத்தில் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி திருடுவது, மனிதர்களின் பலவீனத்தை பணமாக மாற்றுவது ஆகியவற்றை மையமாக கொண்டு அவர் இந்த படத்தை உருவாக்கி இருந்தார். படத்தின் கதை அருமையாக இருந்ததால் ரஜினியே அவரை பாராட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.