ஏ.ஆர். ரஹ்மான் மாஸ்க் விலை…? கேட்டா மயங்கி விழுந்திடுவீங்க…!
சென்னை: இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் அணிந்திருக்கும் மாஸ்க்கின் விலை என்ன என்பது பற்றிய விவரங்கள் வெளியாகி உள்ளது.
கொரோனா தொற்றால் நாடே தொடர்ந்து கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. கொரோனாவை எதிர்கொள்ள தடுப்பூசி பேராயுதம் என்று மத்திய அரசு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.
அதை ஏற்று பலரும் கொரோனா தடுப்பூசியை போட்டு வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிரபல இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் தமது மகன் அமீனுடன் சென்று தடுப்பூசி போட்டுக் கொண்டார்.
இது தொடர்பான போட்டோ ஒன்றையும் அவர் ரிலீஸ் செய்துள்ளார். ஆனால் போட்டோவை பார்த்த பலரும் இஷ்டத்துக்கு விமர்சிக்க ஆரம்பித்து உள்ளனர். அதற்கு காரணம் இல்லாமல் இல்லை.
ரஹ்மான் அணிந்திருந்த மாஸ்க்கானது இரு பக்கமும் சுத்திகரிப்பானுடன் உள்ள மாஸ்க்காகும். அதன் மூலம் உள்ளே வரும் காற்றானது சுத்திகரிக்கப்பட்ட பின்னரே உள்ளே வரும்.
ஆனால் இதன் விலையை கேட்ட ரசிகர்களுக்கு மயக்கம் வராத குறைதான். அந்த மாஸ்க்கின் விலை 18 ஆயிரம் ரூபாயாம். பின்னர் திட்டாமல் என்ன செய்வார்களாம் என்று பலரும் கேள்வி எழுப்பி உள்ளனர்.