நடிகையுடன் மாஜி மணிகண்டன் வீடியோ…! 'அதிர்ந்த' போலீஸ்
சென்னை: நடிகை சாந்தினியுடன் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் இருக்கும் வீடியோக்கள், போட்டோக்கள் ஆகியவற்றை கண்டு போலீசார் செமத்தியாக அதிர்ந்து போயிருக்கின்றனர்.
கல்யாணம் செய்து கொள்கிறேன் என்று கூறி 5 ஆண்டுகள் குடும்பம் நடத்தினார், கட்டாய கருக்கலைப்புக்கு காரணமானார்,ரவுடிகளை வைத்து மிரட்டினார் என்பது முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீதான குற்றச்சாட்டு ஆகும்.
சாந்தினியின் புகார் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் மணிகண்டனை கைது செய்ய பல நாட்களாக தீவிர முயற்சி எடுத்தனர். கடைசியில் பெங்களூருவில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் இருந்த மணிகண்டனை போலீசார் கைது செய்து சென்னை அழைத்து வந்தனர்.
சென்னை அடையாறு காவல்நிலையத்தில் போலீசார் விசாரித்து போது பல தகவல்கள் வெளியாகி உள்ளதாம். சாந்தினி ஒப்புக் கொண்டார், அதனால் தான் அவருடன் குடும்பம் நடத்தினேன் என்று கூறி உள்ளாராம். அவர் வைத்திருந்த 2 செல்போன்களை ஆய்வுக்கு உட்படுத்தினர்.
சைபர் க்ரைம் போலீசார் ஆய்வின் போது பல திடுக்கிடும் வீடியோக்களும், போட்டோக்களும் கிடைத்துள்ளதாம். சாந்தினியும், மணிகண்டனின் ஒன்றாக படுக்கையில் இருக்கும் வீடியோக்கள், போட்டோக்கள் என 100க்கும் மேற்பட்டவை இருந்ததை கண்டு போலீசார் அதிர்ந்து போயிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
வீடியோக்கள் இருந்தாலும்… அவை எந்தளவுக்கு உண்மை என்பதை கண்டறியும் முயற்சியில் போலீசார் இறங்கி உள்ளனர். அதன் முடிவுகளின் படியே உண்மை தன்மை தெரியவரும் என்று அவர்கள் கூறி இருக்கின்றனர்.