திமுகவில் 55 ஆயிரம் பேர் விபச்சாரிகளா..? துரைமுருகனை காண்டாக்கிய அதிமுக பிரபலம்
மதுரை: கோவையில் திமுகவில் 55 ஆயிரம் சேர்ந்தனர் என்பது கேலிக்கூத்து, அவர்கள் அனைவரும் விபச்சாரிகளா என்று துரைமுருகனுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கேள்வி எழுப்பி உள்ளார்.
மதுரை பழங்காநத்தத்தில் நிகழ்ச்சி ஒன்றில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியதாவது:
மதுரை மாநகராட்சியில் எந்த மக்கள் நல பணிகளும் நடக்கவில்லை. தமிழக அரசு செயல்படாத அரசாக உள்ளது. தமிழகத்துக்கு எப்படி ஸ்டாலின் முதல்வரோ அதேபோல் சினிமாவுக்கு உதயநிதி ஸ்டாலின் முதல்வராக இருக்கிறார்.
எதிர்க்கட்சியாக இருக்கும் போது ஒன்றும், ஆளுங்கட்சியாக இருக்கும் போதும் ஒன்றும் திமுக பேசி வருகிறது. எங்கு பார்ததாலும் முதல்வருக்கு பாராட்டு விழா, இதுபோன்ற விழாக்களில் மட்டுமே அவர் கலந்து கொள்கிறார்.
அதிமுகவில் தீர்ப்பு எப்படி இருந்தாலும் கவலையில்லை, அனைவரும் எடப்பாடி பழனிசாமி பக்கம் தான் இருக்கின்றனர். கோவையில் திமுக கூட்டத்தில் 55 ஆயிரம் இணைந்ததாக சொல்கின்றனர்.
இது என்ன கேலிக்கூத்து. மாற்றுக்கட்சிகளில் இருந்து திமுகவுக்கு வருபவர்கள் விபச்சாரிகள் என்று திமுகவின் பொது செயலாளர் துரைமுருகன் கூறி இருக்கிறார். அப்படியானால் இந்த 55 ஆயிரம் பேரும் விபச்சாரிகளா?
திமுக ஆட்சியில் அமர்ந்தது முதல் மக்கள் உயிரை கையில் பிடித்து கொண்டு இருக்கின்றனர் என்று கூறியிருக்கிறார்.