பள்ளி வளாகத்தில் கதறி துடித்து உருண்ட மாணவிகள்…! ஆட்டுவிக்கும் வினோத நோய்
சாமோலி: உத்தரகாண்ட் மாநிலத்தில் அரசு பள்ளி மாணவிகள் சிலர் திடீரென கதறி துடித்து அழுது உருளும் வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சாமோலி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளியில் மாணவிகள் சிலர் வகுப்பறையை விட்டு வெளியே வந்து கதறி கூச்சல் போட்டுள்ளனர். தலைமுடியை கலைத்தவிட்டபடி, பள்ளி வளாகத்தில் தரையில் உருண்டு, அழுது கதறி துடித்துள்ளனர்.
பள்ளி நேரத்தில் மாணவிகள் இப்படி நடந்து கொண்டது கண்டு ஆசிரியர்கள் திகைத்து போயினர். அவர்களை சமானப்படுத்த முயற்சித்த போது முன்பை காட்டிலும் அதி வேகமாக உருண்டு சத்தமிட்டு கதறி அழுதனர்.
விஷயம் மெல்ல, மெல்ல வெளியில் பரவ மருத்துவக்குழு உடனடியாக பள்ளிக்கு விரைந்து சென்றிருக்கிறது. அவர்களை பரிசோதித்த போது அனைவருக்கும் மாஸ் ஹிஸ்டீரியா என்ற மன நோய் இருப்பது தெரிய வந்தது.
அண்மையில் சாமோலி மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள பெருக்கில் சக தோழி ஒருவர் பலியான அதிர்ச்சியில் அவர்கள் இருப்பதும், அதில் இருந்து மீள முடியாமல் கதறியதும் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் வழக்கம் போல் அந்த ஊர் மக்கள் பில்லி, சூனியம் பிடித்துவிட்டது, பரிகாரம் செய்ய வேண்டும் என்று பூசாரிகளை தேடி கிளம்பி இருக்கின்றனர்.