Sunday, May 04 12:36 pm

Breaking News

Trending News :

no image

மார்ச் 16.. மதியம் 3 மணி…! நாடே எதிர்பார்க்கும் அறிவிப்பு


பெரும் எதிர்பார்ப்பு மற்றும் அளவில்லா பரபரப்புகளுக்கு இடையே நாடாளுமன்ற தேர்தல் தேதியை நாளை மதியம் 3 மணிக்கு தேர்தல் ஆணையம் அறிவிக்கிறது.

நாளைய தினம் அதிகாரப்பூர்வமாக தேர்தல் தேதிகள், வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்யும் நாள், தேர்தல் நடைமுறைகளை தேர்தல் ஆணையம் வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

பாஜக, காங்கிரஸ், திமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் எதிர்பார்க்கும் இந்த தேதிகளை தொடர்ந்து, அடுத்தக்கட்ட தேர்தல் களம் தயாராக இருக்கிறது. அநேகமாக மே 10ம் தேதி முதல் 15ம் தேதிக்குள் தேர்தல் தேதி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இம்முறையும் மேற்கு வங்கம் உள்ளிட்ட ஒரு சில மாநிலங்களில் மட்டும் பல கட்ட தேர்தல் நடக்கும் என்றும் மற்ற மாநிலங்களில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என்று தெரிய வந்துள்ளது. நாளை தேர்தல் தேதி அறிவிப்பு என்று உறுதிப்படுத்தப்பட்டு உள்ளதால் அனைத்து கட்சிகளும் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதில் தீவிர ஆலோசனையில் இறங்க முடிவு எடுத்துள்ளன.

தேர்தல் தேதி அறிவிப்பு வெளியான அடுத்த சில நாட்களில் வேட்பாளர்கள் பட்டியலை அந்தந்த கட்சிகள் வெளியிடும் என்றும், தேர்தல் கால பிரச்சார சுற்றுப்பயணங்கள் இறுதி செய்யப்பட்டு விடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 2 வாரங்களுக்கு மேலாக எழுந்து வந்த சஸ்பென்ஸ் நாளை மதியம் 3 மணியுடன் முடிகிறது என்பதால் வாக்காளர்களும் அதை ஆவலுடன் எதிர்பார்த்து காத்து இருக்க ஆரம்பித்துள்ளனர். 

Most Popular