Sunday, May 04 12:52 pm

Breaking News

Trending News :

no image

அண்ணன் ஓபிஎஸ்க்கு இப்படியா ஆகணும்…? தொண்டர்கள் வேதனை…!


பெரியகுளம்: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வத்தின் சகோதரர் பாலமுருகன் திடீரென காலமானார்.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வத்தின் இளைய சகோதரர் பெயர் பாலமுருகன். ஓபிஎஸ்சுக்கு ஓ பாலமுருகன், ஓ. சுந்தர், ஓ ராஜா என 3 சகோதரர்கள் உள்ளனர். ஒரு அண்ணன் ஏற்கனவே இறந்துவிட்டார். 4 சகோதரிகள் இருக்கின்றனர். இதில் 2வது தம்பி தான் பாலமுருகன்.

விவசாயத்தை கவனித்து வந்த பாலமுருகன் ஓராண்டாகவே உடல்நலம் இன்றி காணப்பட்டார். சில நாட்களாக அவர் திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

நேற்று திருவனந்தபுரத்தில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பிய அவர் இன்று அதிகாலை காலமானார். மறைந்த பாலமுருகனுக்கு லதா மகேஸ்வரி என்ற மனைவியும், 14 வயதில் மகளும் இருக்கின்றனர். ஓபிஎஸ் தம்பி மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ஏற்கனவே தேர்தலில் அதிமுக தோற்று போனது, எதிர்க்கட்சி தலைவராக ஆக முடியாமல் போனது என ஓபிஎஸ் கவலையில் இருந்து வருகிறார். இப்போது அடுத்த சோகமாக சகோதரர் உயிரிழந்து போயிருப்பதால் ஓபிஎஸ் கடும் வேதனையில் உள்ளதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர். அடுத்தடுத்து பெரும் சோகமாக சம்பவங்கள் நடந்து வருவதாகவும் அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Most Popular