Sunday, May 04 12:55 pm

Breaking News

Trending News :

no image

கொரோனா அட்வைசும்…13 கட்சிகளும்…! முதலமைச்சர் ஸ்டாலின் முடிவு...!


சென்னை: கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் அனைத்து கட்சிகள் கொண்ட ஆலோசனை குழு அமைக்கப்பட்டு உள்ளது.

கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை அதிகரித்து வர, வர… தமிழக அரசும் தீவிர நடவடிக்கைகளில இறங்கி உள்ளது. ஆளுங்கட்சி மட்டுமல்லாது அனைத்துக் கட்சிகளும் ஒருங்கிணைந்து கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தி வந்தார்.

 இந் நிலையில் அனைத்துக் கட்சி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் ஆலோசனைகள் அளிக்க அனைத்துக் கட்சிக் குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழுவில் இடம்பெற்றுள்ள அனைத்துக் கட்சிகள் விவரம் வருமாறு:

மருத்துவர்.எழிலன் (திமுக)

மருத்துவர். சி.விஜயபாஸ்கர்(அதிமுக)

முனிரத்தினம் (காங்கிரஸ்)

ஜி.கே.மணி (பாமக)

நயினார் நாகேந்திரன் (பாஜக)

சதன் திருமலைக்குமார் (மதிமுக)

எஸ்.எஸ்.பாலாஜி (விசிக)

வேல்முருகன் (தவாக)

நாகை மாலி (மார்க்சிஸ்ட்)

ராமச்சந்திரன் (இந்திய கம்யூனிஸ்ட்)

ஜவாஹிருல்லா (மமக)

ஈஸ்வரன் (கொமதேக)

ஆகியோர் இந்த குழுவில் உள்ளனர். 13 கட்சிகளில் இருந்தும் தலா ஒரு எம்எல்ஏவுக்கு குழுவில் வாய்ப்பளிக்கப்பட்டு உள்ளது. கொரோனா தொற்றை எப்படி கட்டுப்படுத்துவது என்பது குறித்து இந்த குழு கூடி ஆலோசிக்கும்.

Most Popular