ஸ்ரீரங்கம் கோயிலில் இப்படியா…? ரத்தம் வழிய சரிந்த பக்தர்
திருச்சி: புகழ்பெற்ற திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் பக்தருக்கு அடி உதை விழுந்ததாக ஒரு வீடியோ இணையத்தில் உலா வந்து அதிர்ச்சியை தருகிறது.
ஸ்ரீரங்கம் கோயில் பற்றி அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. பக்தர்களின் மனதுக்கு எப்போதும் நெருக்கமாக பாவிக்கப்படும் இந்த கோயிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்வர்.
தற்போது அய்யப்ப பக்தர்கள் சீசன் என்பதால் தினசரி வரும் பக்தர்களின் எண்ணிக்கை வழக்கத்தை விட அதிகமாக இருக்கிறது. இந் நிலையில் இணையத்தில் உலா வரும் ஒரு வீடியோ பார்ப்போரை பதற வைத்துள்ளது.
விஷயம் இதுதான்… ஸ்ரீரங்கம் கோயிலில் அய்யப்ப பக்தர் ஒருவர் கோவில் பணியாளர்களால் தாக்கப்பட்டார், ரத்தம் வழிய, வழிய அவர் அங்கே வலியில் கதறியபடி உட்கார்ந்திருக்கிறார் என்பதுதான்.
அய்யப்ப பக்தர் தாக்கப்பட்ட நேரத்தில் அவருக்கு ஆதரவாக கோவில் ஊழியர்களை கண்டித்து சக பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என முழக்கத்தையும் எழுப்பி உள்ளனர்,சமூக வலைதளங்களில் இப்படி ஒரு வீடியோ பரவி வருகிறது.
https://twitter.com/OurTemples/status/1734429217016709595
இந்த வீடியோவை வலதுசாரி ஆதரவாளராக ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் வெளியிட்டு உள்ளார். கிட்டத்தட்ட 1 நிமிடத்துக்கும் மேலாக காட்சிகள் கொண்ட இந்த வீடியோவை பார்த்த பலரும் கோயிலில் என்ன நடந்தது? எதற்காக பக்தர் தாக்கப்பட்டார் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
மேலும் சிலர், இந்த வீடியோ உண்மைதானா? அல்லது வேறு ஏதேனும் பரபரப்புக்காக இருக்கலாம்…. உண்மையை கோவில் நிர்வாகமும், காவல்துறையும் மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று கோரி உள்ளனர். எது எப்படியோ… பக்தர்கள் மத்தியில் இப்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது என்பது தான் நிச்சயம்…!
அந்த சர்ச்சைக்குரிய வீடியோ இந்த செய்தியின் கீழே இணைக்கப்பட்டு இருக்கிறது.