திருக்குறள் சொன்னால்… 1 லிட்டர் பெட்ரோல் ப்ரீ.. ப்ரீயோ ப்ரீ…! எந்த ஊருன்னு பாருங்க…?
கரூர்: கரூரில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் 20 திருக்குறள் கூறினால் 1 லிட்டர் பெட்ரோல் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கரூர் மதுரை பைபாஸ் சாலையில் உள்ளது வள்ளுவன் பெட்ரோல் பங்க். 20 திருக்குறளை ஒப்புவித்தால் ஏப்ரல் மாதம் இறுதி வரை 1 லிட்டர் பெட்ரோல் இலவசம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன் காரணமாக நாள்தோறும் அந்த பெட்ரோல் பங்கில் கூட்டம் குவிந்து வருகிறது.
தமிழையும், திருக்குறளின் பெருமையை அனைவருக்கும் உணர்த்தவே இப்படி வித்தியாசமாக அறிவிப்பை வெளியிட்டதாக கூறுகிறார் அதனை நடத்தி வரும் செங்குட்டுவன்.
இவர் ஒரு எம்.காம் பட்டதாரி. திருக்குறள் மீதான ஆர்வம் காரணமாக வள்ளுவர் உணவகம், வள்ளுவர் கலை, அறிவியல் கல்லூரி, வள்ளுவர் பெட்ரோல் பங்க் ஆகியவற்றை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், தனது பெட்ரோல் பங்கில் 20 திருக்குறளை ஒப்புவித்தால் 1 லிட்டர் பெட்ரோல் தருவதாக அறிவித்துள்ளார். அவரது இந்த அறிவிப்பால் கரூர் – மதுரை பைபாஸ் சாலையில் உள்ள அவரது வள்ளுவர் பெட்ரோல் பங்கில் கூட்டம் அலை மோதி வருகிறது. அவர் அறிவித்துள்ள இந்த போட்டி ஏப்ரல் மாதம் வரை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.