போதும்டா சாமி….! மீண்டும் ஊரடங்கை நீட்டித்த மத்திய அரசு..! எப்போது வரை தெரியுமா?
டெல்லி: நவம்பர் 30ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப் பட்டு உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
கொரோனா காரணமாக நாடு முழுவதும் மார்ச் மாதம் 25-ம் தேதி முதல் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. பொருளாதார நடவடிக்கைகளைத் தொடங்கும் நோக்கில் மத்திய அரசு தளர்வுகளை அறிவித்துவருகிறது.
அதன்படி, அக்டோபர் 15 முதல் நாடு முழுவதும் 50 சதவிகிதப் பார்வையாளர்களுடன் திரையரங்குகள், மல்டிப்ளெக்ஸ் திரையரங்குகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டிருகிறது. இந் நிலையில், நவம்பர் 30ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப் பட்டு உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
ஊரடங்கு தளர்வுகள் தொடர்பாக செப்டம்பர் மாதம் 30ம் தேதி வெளியிடப்பட்ட அறிவிப்பு நவம்பர் 30ம் தேதி வரை நீட்டித்துள்ளது. மாநிலங்களுக்கிடையேயான போக்குவரத்திற்கு எவ்வித கட்டுப்பாடு, முன்னனுமதி பெற அவசியம் இல்லை என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.